பான்டதெனிக் அமிலம்

பான்டதெனிக் அமிலம் வைட்டமின் பி குழுவைச் சேர்ந்த ஓர் அமிலம் (வைட்டமின் பி5). கிரேக்க மொழியிலிருந்து வந்தது இதன் பெயர். கிரேக்க மொழியில் ‘பான்டோ’ என்றால் ‘எங்கேயும்’ (Everywhere) என்று பொருள். அதிகமான உணவுப் பொருள்களில் இது கிடைப்பதால், இதற்கு இந்தப் பெயர் வந்தது.

பான்டதெனிக் அமிலத்தின் சிறப்புகள்


நம் உடலுக்குக் கொழுப்பும் புரதச்சத்தும் கிடைப்பதற்கு மிகவும் உதவுகிறது. ஆரோக்கியமான தலைமுடி, கண்கள், தோல் மற்றும் கல்லீரல் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நரம்பு மண்டலம் சரிவர வேலைசெய்ய உதவுகிறது. மேலும், ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியிலும் அட்ரீனல் சுரப்பியில் ஹார்மோன் சுரப்பதற்கும் வழிவகுக்கிறது இதை, `ஆன்டிஸ்ட்ரெஸ் வைட்டமின்’ என்றும் அழைப்பார்கள்.
பான்டதெனிக் குறைவால் உண்டாகும் பிரச்னைகள்
* உடல் சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், எரிச்சல்.
* வாந்தி, வயிற்றுவலி.
* பாத எரிச்சல், தலைமுடி நரைத்தல்.
* நுரையீரலில் சளி.
* அதிகக் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு (Triglyceride).
* அடிபட்டால் புண் ஆறுவதற்கு நேரமாவது.
* முடக்கு வாதம் (Rheumatoid Arthritis).
எதில் பான்டதெனிக்?
* காய்கறிகள் – காளான், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய்.
* பாலாடைக்கட்டி (சீஸ்).
* மீன், இறைச்சி, முட்டை, வான்கோழி.
* அவகேடோ (Avocados).
* சூரிய காந்தி விதை, ஆளிவிதை (Flax Seed).
ஒரு நாளைக்கு எவ்வளவு பான்டதெனிக் தேவை?
* 0 – 6 மாதக் குழந்தைகளுக்கு – 1.7 மி.கி.
* 7 மாதம் முதல் 1 வயது வரை – 1.2 மி.கி.
* 1 – 3 வயது வரை – 2 மி.கி.
* 4 – 8 வயது வரை – 3 மி.கி.
* 9 – 18 வயது வரை – 4 மி.கி.
* 14 முதல் 19 வரை – 5 மி.கி.
* 20 வயது முதல் அனைவருக்கும் – 6 முதல் 10 மி.கி.

%d bloggers like this: