Daily Archives: ஓகஸ்ட் 23rd, 2017

ஜாய்ஃபுல்" கூவத்தூர்.. "கலர்ஃபுல்" வின்ட்பிளவர்.. 19 தினகரன் எம்எல்ஏக்களுக்கு "2வது லட்டு"!

டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சின்னவீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் ப்ளவர் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த விடுதி மெகா கூவத்தூர் போலவே காட்சி தருகிறது.

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அசாதாரண சூழல் ஏற்படும்போதெல்லாம் ரெசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்க வைப்பது ட்ரெண்ட்டான விஷயமாக இருக்கிறது. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க 122 எம்எல்ஏக்களை கூவத்தூர் ரெசாட்டில் தங்க வைத்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மூக்கு முட்ட சாப்பாடு, சில பல ஜாலி விஷயங்கள் என்று சுமார் 10 நாட்கள் ஜாலியாக இருந்தனர் எம்எல்ஏக்கள். ஆனால் கடைசியில் சசிகலா ஜெயிப்பதற்கு பதிலாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் முதல்வராக பழனிசாமி முன் நிறுத்தப்பட அவருக்கு வாக்களித்தனர்.

Continue reading →

பீரியட்ஸ் எது நார்மல்?

பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை  ஆரோக்கியக் குறைபாட்டின்  அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்’’ என்று

Continue reading →

காய்ச்சல் விரட்டும்; முடி வளர உதவும் பவளமல்லி!

பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே… வசந்தகாலம் தேடி வந்தது…’ – பட்டித்தொட்டியெங்கும் ஒலித்த இந்தத் திரைப்படப்பாடலை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்தளவுக்கு பிரசித்திபெற்ற இந்த மலருக்கென்று சில புராணக்கதைகளும் உள்ளன.
தேவலோக மரமான பாரிஜாத மலர்தான் பூலோகத்தில் பவளமல்லியாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும் இந்தப்பூக்கள் இரவு முழுவதும் நறுமணம் வீசக்கூடியவை.

Continue reading →

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்கு தினகரன் அணியின் குடைச்சல்கள் ஆரம்பம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் அணியினர் செயல்படத் தொடங்கிவிட்டனர். முதல்கட்டமாக, 19 எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அதோடு, முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading →

கைகழுவ கற்றுத்தருவோம்!

ந்தியாவில் கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கால் (Diarrhoea), ஆண்டுக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்’ என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. `குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தைகளுக்கு நன்கு சுத்தமாகக் கைகழுவும் பழக்கத்தைக் கற்றுத்தரவேண்டியதும் அதை அவர்களைக் கடைப்பிடிக்கும்படிச் செய்யவேண்டியதும் மிக அவசியம். அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி அந்தப் பழக்கத்தைக் கொண்டு வருவது தவறு. சில எளிய வழிமுறைகள் மூலம் கற்றுத்தரலாம்; அவற்றைக் குழந்தைகளைக் கடைப்பிடிக்கச் செய்யலாம்; அவர்களின் ஆரோக்கியம் காக்கலாம். அவை…

Continue reading →