கைகழுவ கற்றுத்தருவோம்!

ந்தியாவில் கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கால் (Diarrhoea), ஆண்டுக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்’ என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. `குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தைகளுக்கு நன்கு சுத்தமாகக் கைகழுவும் பழக்கத்தைக் கற்றுத்தரவேண்டியதும் அதை அவர்களைக் கடைப்பிடிக்கும்படிச் செய்யவேண்டியதும் மிக அவசியம். அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி அந்தப் பழக்கத்தைக் கொண்டு வருவது தவறு. சில எளிய வழிமுறைகள் மூலம் கற்றுத்தரலாம்; அவற்றைக் குழந்தைகளைக் கடைப்பிடிக்கச் செய்யலாம்; அவர்களின் ஆரோக்கியம் காக்கலாம். அவை…

* கைகழுவும் பழக்கத்தை நீங்கள் முதலில் கடைப்பிடியுங்கள்; குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

கைகழுவுவதால் கிருமித்தொற்றிலிருந்து தப்பிக்கமுடியும் என்பதையும்  அது ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்பதையும் புரிய வையுங்கள்.

20 விநாடிகளுக்கு நன்றாகக் கைகளைக் கழுவவும் பிறகு ஈரமின்றித் துடைத்துக்கொள்ளவும் சொல்லிக்கொடுங்கள்.

கை கழுவாததால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கவும்.

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், வளர்ப்புப்பிராணிகளைத் தொட்டிருந்தாலும், இருமல், தும்மல் வந்தவுடனும், மூக்கில் கை வைத்திருந்தாலும் உடனே  கைகழுவ வேண்டும் எனக் கற்றுக்கொடுங்கள்.

கைகளைக் கழுவத் தண்ணீரும் சோப்பும் கிடைக்காதபோது, ஆன்டி பாக்டீரியல் சோப்புகள், கிருமி நாசினிகள் போன்றவை எளிதாகக் கிடைக்கும்படி வைத்திருங்கள்.

%d bloggers like this: