வாட்டர் டாக்டர் – மொபைல் ஆப்

உணவு இடைவேளையைக் காலை, மதியம், இரவு எனப் பிரித்து வைத்திருப்பதால் அவற்றைச் சரியாகப் பின்பற்றுகிறோம். ஆனால் தினமும் இத்தனை நிமிட இடைவெளியில் தண்ணீர் குடிக்கவேண்டும் என ஏதாவது விதிமுறை வைத்திருக்கிறோமா?  இல்லையே… போதுமான அளவிற்குத் தண்ணீர் அருந்தாவிட்டால் நம் உடலுக்குத்  தேவையான அளவிற்கு நீர்ச்சத்து  கிடைப்பதில்லை.  இதனால் மனரீதியான பிரச்னை தொடங்கி, உடல் ரீதியான பிரச்னைகள் வரை பல சிக்கல்கள் வருகின்றன. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது ‘ஹைட்ரோ கோச்.’

தினசரி  நம் உடலுக்குத் தேவைப்படும் தண்ணீரை, சரியாக அருந்த வைப்பதுதான் இதன் வேலை. வயது, உடல் எடை, பாலினம், உடற்பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு, நாம் தினமும் சராசரியாக எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் எனச் சொல்கிறது இந்த ஆப். ஒவ்வொரு முறையும் திரவ உணவுகள் அருந்திய பின்னர், அந்தத் தகவல்களை இதில் பதியவேண்டும். இதைவைத்துக் கொண்டு, இந்த ஆப் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரையிலும், நாம் அருந்திய திரவ உணவுகள் எவ்வளவு, இன்னும் இந்த நாளில் நம் உடம்பிற்குத் தேவையான தண்ணீரின் அளவு எவ்வளவு ஆகியவற்றை நமக்குக் காட்டும். #StayHydrated என்பதுதான் ஹைட்ரோகோச்சின் பன்ச்.
ப்ளே  ஸ்டோர்  லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.codium.hydrocoach

%d bloggers like this: