ஸ்லீப்பர் செல்களாக 10 அமைச்சர்கள்
மன்னார்குடி முதல் தலைமைச் செயலகம் வரை ஒரு சுற்று வந்தபிறகு லேண்ட் ஆனார் கழுகார். ‘‘எல்லா குழப்பங்களும் சென்னையில் நடந்து கொண்டிருக்க… மன்னார்குடியில் உமக்கு என்ன வேலை?” எனக் கழுகாரைச் சீண்டினோம்.
‘‘மன்னார்குடிதான் அனைத்துக்கும் அடித்தளம். அடிபட்ட பாம்பாகத் துடிக்கிறார் திவாகரன். தினகரனை விட ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பது திவாகரன்தான். அவர்தான் ஆரம்பத்திலிருந்தே, அணிகளின் இணைப்புக்காக இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்தவர். அவரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தார்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால்,
தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?!
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும், உளவியல் சிக்கலைப் போக்கும்… ஆரோக்கியம் காக்கும் முத்தம்!
முத்தம்’ என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும், மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்
கண்ணான கண்ணே நீ கலங்காதடி-மொபைல் ஆப்
“கண்ணான கண்ணே நீ கலங்காதடி” என நம் கண்களைச் சிரத்தையுடன் கவனித்துக்கொள்ள உதவும் ஆப், ‘ஐ எக்சர்சைஸஸ்’. உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சிகளோ, அதைப்போலவே கண்களுக்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எளிமையாகச் சொல்லித்தருவதுதான் இந்த ஆப்பின் பணி.
காலை எழுந்ததும் செய்யவேண்டிய கண் பயிற்சிகள், மாலையில் பணிகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய பயிற்சிகள், இடையில் கண் அயர்ச்சி ஏற்படும் சமயங்களில் செய்யவேண்டிய பயிற்சிகள் என 50-க்கும் மேற்பட்ட கண் பயிற்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஆப். ஒவ்வொரு பயிற்சியையும் ஆப் உடன் இணைந்தே செய்யலாம். இணையவசதியே தேவையில்லை. இதுதவிர கண்குறைபாடுகள் பற்றிய குறிப்புகள், அவற்றுக்காக மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் போன்றவைற்றையும் இணைத்திருப்பது இதன் சிறப்பு.
ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.eyeexamtest.eyecareplus