கண்ணான கண்ணே நீ கலங்காதடி-மொபைல் ஆப்

“கண்ணான கண்ணே நீ கலங்காதடி” என நம் கண்களைச் சிரத்தையுடன் கவனித்துக்கொள்ள உதவும் ஆப், ‘ஐ எக்சர்சைஸஸ்’. உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சிகளோ, அதைப்போலவே கண்களுக்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எளிமையாகச் சொல்லித்தருவதுதான் இந்த ஆப்பின் பணி.
காலை எழுந்ததும் செய்யவேண்டிய கண் பயிற்சிகள், மாலையில் பணிகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய பயிற்சிகள், இடையில் கண் அயர்ச்சி ஏற்படும் சமயங்களில் செய்யவேண்டிய பயிற்சிகள் என 50-க்கும் மேற்பட்ட கண் பயிற்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஆப். ஒவ்வொரு பயிற்சியையும் ஆப் உடன் இணைந்தே செய்யலாம். இணையவசதியே தேவையில்லை. இதுதவிர கண்குறைபாடுகள் பற்றிய குறிப்புகள், அவற்றுக்காக மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் போன்றவைற்றையும் இணைத்திருப்பது இதன் சிறப்பு.
ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.eyeexamtest.eyecareplus

%d bloggers like this: