தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்
கள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.
அறிவியலின் மூன்றாவது கண்
வீட்டு வளாகத்துக்குள்தான் தண்ணீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், கட்டிடத்துக்கு வெளியே சுற்றுச்சுவருக்குள் பொருத்தப்பட்டிருந்த அதை யாரோ இரவோடு இரவாகக் கழற்றிச் சென்றுவிட்டார்கள். மூன்று நாட்கள் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ திறந்து கிடக்க, விலை உயர்ந்த பொருட்களைக் காணோம்.
மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்!
மன அழுத்தம்… இதை மன உளைச்சல் என்றும் சொல்வார்கள். பொதுவாக மன அழுத்தத்தை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று, புறநிலைக் காரணிகளால் வரக்கூடியது. அதாவது, இயற்கைப் பேரழிவுகள், பிரியமானவர்களின் மரணம், பிறரின் ஏச்சுப் பேச்சுகளால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். இது அனைவருக்கும் வரக்கூடியதே. இன்னொன்று, அகநிலைக்காரணிகளால் வரக்கூடியது. ஆனால், இது மனநிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.
சாயம் வெளுக்கும் சமையல்!
நெகிழி அரிசி, நெகிழி முட்டை எனக் கலப்படம் பற்றிய திகில் எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நீண்டகாலமாக வரும் வடிவம், நிறத்தைப் பார்த்து மயங்கி, அதில் உள்ள கலப்படம் குறித்து சற்றும் அறியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
பெருங்காயம், மிளகு, மஞ்சள், தேன் என அஞ்சறைப் பெட்டியில் அங்கம் வகிக்கும் மூலப்பொருட்களிலேயே கலப்படம் தொடங்கிவிடுகிறது. சமையலுக்குப் பயன்படும் மருத்துவக் குணம் கொண்ட பொருட்களில் இப்படிக் கலப்படம் நடப்பதால் பொருளாதார ரீதியாகவும் உடல்நிலை சார்ந்தும் மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். இவற்றைக் கண்டறிவது, தடுப்பது, மாற்றிப் பயன்படுத்துவது எப்படி?