கடன் வாங்கும் போது முக்கியமாகச் செய்ய வேண்டிய விஷயம்!

பெரிய அளவில் கடன் வாங்கும்போது, அந்தக் கடனுக்கு இணையாக ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். இது, காப்பீடு மட்டுமே கொண்ட டேர்ம் பிளானாக இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த நினைக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் இறக்கும்பட்சத்தில்,  அவரது குடும்பத்தினரே அந்தக் கடனை அடைக்க வேண்டும். கடனை அடைக்க முடியவில்லை எனில், வீட்டை இழக்க வேண்டியிருக்கும். இந்த  இக்கட்டான சூழல் ஏற்படாமல் இருக்க, வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்ஷூரன்ஸ் பாலிசியையும் சேர்த்தே வாங்க வேண்டும்.  

வீட்டுக் கடன் நிறுவனங்களில் சில, வீட்டுக் கடன் தரும்போதே இன்ஷூரன்ஸ் பாலிசியையும் சேர்த்துத் தந்துவிடுகின்றன. இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரிமீயமும் கடனுடன் சேர்த்துத் தரப்படுகிறது. அல்லது தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில், வாங்கும் கடன் தொகை கட்டி முடிக்கும்வரை கவரேஜ் அளிப்பது. உதாரணமாக, ஒருவர் ரூ. 25 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்கினால், அதைக் கட்டி முடிக்கும் வரை கவரேஜ் கிடைக்கும். இரண்டாவது வகையில், கடன் தொகை குறையக் குறைய, கவரேஜ் தொகை குறைந்து, பிரீமியமும் குறையும். இதில் தொடக்கத்தில் அதிகமாகவும், பின்னர் குறைந்த அளவிலும் பிரீமியம் கட்டினால்போதும். இதற்கான பிரிமீயம் எவ்வளவு தெரியுமா..? 

%d bloggers like this: