Monthly Archives: ஓகஸ்ட், 2017

ராங் கால் -நக்கீரன் 25.8.2017

ராங் கால் -நக்கீரன் 25.8.2017

Continue reading →

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள்

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் மோதல் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் கட்சியும் ஆட்சியும் தப்புமா? தங்களுக்கு யார் நிர்வாகி என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சாதாரண நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. 1972-ல் எம்ஜிஆர் அதை உருவாக்கிய போது அபிமானம் மிக்க தொண்டர்களாலும் , நிர்வாகிகளாலும் வழி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் என்ற சக்தி அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.

Continue reading →

மலிவு விலையில் பொருட்கள் வாங்குவது சரியா?

ஆடி மாத ஷாப்பிங் களை கட்டுகிறது. எங்கு பார்த்தாலும் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு விளம்பரங்கள் காணப்படுகின்றன. மக்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வெள்ளம்போல் குவிகின்றனர். ரகங்களும் குவிந்து கிடக்கின்றன. விலையும் குறைவு என்பதால் மக்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர். நிறைய பேர் ஷாப்பிங் முடித்து விட்டு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவார்கள். எல்லாம் சரிதான். ஆனால், பசியோடு ஷாப்பிங் செய்யாதீர்கள் என அனுபவம் வாய்ந்தவர்கள் அட்வைஸ் செய்கின்றனர். நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள்.

Continue reading →

ஸ்விட்ச் முதல் தலையணை வரை… இவையும் எக்ஸ்பயரி ஆகும் தெரியுமா!!

வாழ்க்கையில எல்லாமே ஒரு நேரம் வரைக்கும் மட்டும்தான் பயனுள்ளதாக இருக்கும். நேரம் முடிஞ்சுபோன அப்புறம் அது இருந்தாலும் ஒண்ணுதான். இல்லாம இருந்தாலும் ஒண்ணுதான். இது மனிதர்களுக்கு நன்றாகப் பொருந்தும். ஆனால், மனிதர்கள விட மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு இன்னும் நன்றாகப் பொருந்தும்.

Continue reading →

சபரிமலையில் டி.டி.வி.தினகரன்!’ – முக்கிய பிரமுகரைச் சந்தித்து ஆலோசனை

சபரிமலைக்குச் சென்ற டி.டி.வி.தினகரன், முக்கிய நிர்வாகி ஒருவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர், பா.ஜ.க-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர். சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டிவருகிறார். ஒரு கட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி ‘ஷாக்’ கொடுத்தார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கலக்கத்தைக் கொடுத்தது.

Continue reading →

ஸ்லீப்பர் செல்களாக 10 அமைச்சர்கள்

ன்னார்குடி முதல் தலைமைச் செயலகம் வரை ஒரு சுற்று வந்தபிறகு லேண்ட் ஆனார் கழுகார். ‘‘எல்லா குழப்பங்களும் சென்னையில் நடந்து கொண்டிருக்க… மன்னார்குடியில் உமக்கு என்ன வேலை?” எனக் கழுகாரைச் சீண்டினோம்.

‘‘மன்னார்குடிதான் அனைத்துக்கும் அடித்தளம். அடிபட்ட பாம்பாகத் துடிக்கிறார் திவாகரன். தினகரனை விட ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பது திவாகரன்தான். அவர்தான் ஆரம்பத்திலிருந்தே, அணிகளின் இணைப்புக்காக இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்தவர். அவரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தார்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால்,

Continue reading →

தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?!

மிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க  முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue reading →

ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும், உளவியல் சிக்கலைப் போக்கும்… ஆரோக்கியம் காக்கும் முத்தம்!

முத்தம்’ என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும், மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்

Continue reading →

கண்ணான கண்ணே நீ கலங்காதடி-மொபைல் ஆப்

“கண்ணான கண்ணே நீ கலங்காதடி” என நம் கண்களைச் சிரத்தையுடன் கவனித்துக்கொள்ள உதவும் ஆப், ‘ஐ எக்சர்சைஸஸ்’. உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சிகளோ, அதைப்போலவே கண்களுக்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எளிமையாகச் சொல்லித்தருவதுதான் இந்த ஆப்பின் பணி.
காலை எழுந்ததும் செய்யவேண்டிய கண் பயிற்சிகள், மாலையில் பணிகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய பயிற்சிகள், இடையில் கண் அயர்ச்சி ஏற்படும் சமயங்களில் செய்யவேண்டிய பயிற்சிகள் என 50-க்கும் மேற்பட்ட கண் பயிற்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஆப். ஒவ்வொரு பயிற்சியையும் ஆப் உடன் இணைந்தே செய்யலாம். இணையவசதியே தேவையில்லை. இதுதவிர கண்குறைபாடுகள் பற்றிய குறிப்புகள், அவற்றுக்காக மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் போன்றவைற்றையும் இணைத்திருப்பது இதன் சிறப்பு.
ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.eyeexamtest.eyecareplus

அல்சரை குணப்படுத்தும் பாதாம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அல்சர் மற்றும் அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயு பிரச்னையை சர்செய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.  நாகரிக வாழ்க்கையில் உணவு முறைகள், அதிக பணிச்சுமை, இரவு பகல் பாராமல் உழைப்பது, தூக்கம் கெடுதல், கணினி போன்ற கதிர் வீச்சுக்களால் உடலில் ஏற்படும் மாற்றம், காலம் தவறி சாப்பிடுவது போன்றவற்றால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது.

Continue reading →