மொபைல் கேமரா ஆப்ஸ்!
செல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள். அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே…
கேமரா FV-5 லைட் (Camera FV-5 Lite)
அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, ‘செக்’ டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்
தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்!
தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்..! யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..?
தமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் மீது கவர்னர் கோபம்?
வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்
நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:
மன இறுக்கம் (Depression)
ஆராரோ… ஆரிரரோ!
குழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.
கவுனி அரிசி – கறுப்பில் இருக்கும் சிறப்பு
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம்கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.
ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதே போன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப்பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு. சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.
சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.
விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்