Daily Archives: செப்ரெம்பர் 2nd, 2017

போதை தரும் பீரைக் கொண்டு கூட சில நல்ல விஷயங்களை செய்யலாம். இதை வாசிங்க..

போதை தரும் பீரினால் கிடைக்கும் பயன்கள் முடி உதிர்தல் மற்றும் பொடுகு 3 ஸ்பூன் பீர் உடன் 1/2 கப் தண்ணீரை கலந்து உங்கள் தலையில் நன்கு தேய்த்து கொடுக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு நீராடினால். உங்கள் முடி உதிர்தல் மற்றும் உடைதல் குறையுமாம். பீரின் தன்மை முடியில் ஏற்படும் சேதத்தை குறைகிறதாம். மற்றும் இதனால் பொடுகுத் தொல்லையும் குறைகிறதாம். துருவை போக்கும் உங்களது வீட்டில் சமையல் பாத்திரங்கள் துருப்பிடித்து விட்டது என வீசிவிட வேண்டாம். பீரை துருப்பிடித்த இடத்தில் ஊற்றி கொஞ்ச நேரம் ஊறிய பின்பு கழுவினால் துரு நீங்கிவிடுமாம். பட்டாம்பூச்சிகளை கவரும் உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், அங்கு பட்டாம்பூச்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறீர்களா? கொஞ்சம் பிணைந்த வாழைப்பழத்துடன் பீரை கலந்து உங்கள் வீட்டில் இருக்கும் மரம் மற்றும் கற்கள் இருக்கும் இடத்தில் தெளித்து வைத்தால் பட்டாம்பூச்சிகள் உங்கள் தோட்டத்தை நோக்கி படை எடுக்குமாம். தங்க நகை மினுமினுக்க உங்கள் பழைய தங்க நகைகள் பொலிவிழந்து போய்விட்டதா? கவலையை விடுங்கள்… பீரை தேய்த்து உங்கள் தங்க நகைகளை கழுவினால் மீண்டும் பளபளக்கும். பச்சை புல்வெளி உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும் புல்வெளி காய்ந்து போவது போல இருக்கிறதா? காய்ந்தது போல இருக்கும் புல்வெளி பகுதியில் பீரை தெளித்து வந்தால் அந்த பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நச்சு கிருமிகள் இறந்துவிடும். மீண்டும் பச்சை பசேலென்று வளர உதவும். மர சாமான்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் பழைய பொலிவுற்ற மர சாமான்களை எங்கு ஒளித்து வைப்பது என இடம் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அட எதற்கு ஒளித்து வைக்க வேண்டும். பீரில் ஒரு துணியை நனைத்து மர சாமான்களை துடைத்துவிட்டால் பழையது புதியது போல காட்சியளிக்கும். துரு கறைகள் உங்கள் வீட்டில் உள்ள இரும்பு கட்டில், நாற்காலிகளில் உள்ள துரு கறையை போக்க என்ன செய்தும் போகவில்லையா? பீரை கொண்டு துரு கறை உள்ள பகுதிகளை துடைத்து அதன் மேல் ஈரமற்ற துணியை வைத்து அழுத்தி துடைத்தாலே துரு கறை காணாமல் போய்விடும். இறைச்சியை அறுக்க வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சியை வாங்கி வைத்துவிட்டு அறுப்பதற்கு பெரும் பாடுபடுகிறீர்களா? இறைச்சியின் மீது பீரை ஊற்றி பின் அறுத்தீர்கள் என்றால் சுலபமாக இறைச்சியை துண்டு துண்டாக வெட்ட முடியும்!!!

உடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி !!

புளி இல்லாமல் தென்னிந்திய வீடுகளில், உணவகங்களில் சமையலே இல்லை என நமது உணவுப்பழக்கங்களில் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும், புளியின் பயன்பாடுகளுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் இல்லங்களின் சமையலில் குடம் புளி தான் இடம்பெற்றிருந்தது, என்பது வியப்பாக இருக்கும்.

நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் புளியைவிட அதிக அளவு பலன்கள் தரும், குடம்புளி, நம் பயன்பாட்டில் இருந்து விலகியது, மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து, பரவலாக வேறெங்கும் கிடைக்காத அதன் உற்பத்தியால் இருக்கலாம்.

Continue reading →

ஹோட்டல்ல சாப்பிடறதுக்கு முன்ன இந்த 7 விஷயம் கவனிச்சிருக்கீங்களா?

வீட்டில் என்ன தான் அம்மா, மனைவியின் கையில் ருசியான உணவு சாப்பிட்டுருந்தாலும், நமக்கு பிடித்த நபர்களுடன் சென்று ஹோட்டலில் உணவருந்தி வருவது நம்மில் பலருக்கு ஒரு தனி சுகமான அனுபவமாக இருக்கும்.

Continue reading →

நேர்மறை எண்ணங்கள் பெருகனுமா? வெறுப்பவரையும் நேசி!!

எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று எதுமே இல்லை உலகில். ஒருவருக்கு பிடித்த ஒரு ஆள், அல்லது செயல் அல்லது பொருள் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் பிடிக்காதவரிடம் இருந்து எதிர்மறை கருத்துகள் அல்லது விமர்சனங்கள் வரலாம்.

Continue reading →

உங்கள் நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்பா அல்லது அசிடிட்டியா என எப்படிக் கண்டறிவது?

உங்கள் அலுவலகத்திற்கு படியில் ஏறிச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், திடீரென்று மார்பில் இறுக்கமாக இருக்கிறது. உங்களுடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறுகிறீர்கள். அது அசிடிட்டியால் ஏற்பட்ட வலியாக இருக்கலாம், ஆன்டாசிட் மாத்திரை

Continue reading →

ராங் கால்-நக்கீரன் 31.8.2017

ராங் கால்-நக்கீரன் 31.8.2017

Continue reading →

தேறுமா? தேறாதா? -நக்கீரன் 31.8.2017

தேறுமா? தேறாதா? -நக்கீரன் 31.8.2017

Continue reading →