தினகரனின் 4 ஸ்லீப்பர் செல் அமைச்சர்களை வளைத்த முதல்வர் எடப்பாடி தரப்பு!

சென்னை: தினகரன் கோஷ்டி பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்த ஸ்லீப்பர் செல்களில் 4 அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி தரப்பு வளைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரன் தனி கோஷ்டியாக உருவெடுத்தது முதலே ஸ்லீப்பர் செல்கள் என உச்சரித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி அணியில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் எஸ்கேப் ஆவார்கள் என்று தினகரன் அணி சொல்லி வந்தது.

எம்.எல்.ஏக்கள்

தற்போது 21 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளனர். இதையடுத்து எம்.எல்.ஏக்களை அழைத்து சமாதானப்படுத்தும் முயற்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டு வருகிறது.அமைச்சர்கள் சரண்டர்

அமைச்சர்களில் 6 பேர் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்தான் என்பதை உறுதி செய்து கொண்டது எடப்பாடி தரப்பு.

இவர்களில் 4 பேரை அழைத்து 4 முறை ஆலோசனை நடத்தி தங்கள் பக்கம் இழுத்துவிட்டாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

2 அமைச்சர்கள் நழுவல்

எஞ்சிய 2 பேரும் நாங்கள் சசிகலாவின் விசுவாசிகள்தான்.. எங்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தேவையே இல்லை. அதேநேரத்தில் அரசுக்கு நெருக்கடியும் தரமாட்டோம் என நாசூக்காக சொல்லியுள்ளனர்.

இழுப்பதில் மும்முரம்

தற்போது இந்த 2 அமைச்சர்களையும் இழுத்து போடுவதில் மும்முரமாக இருக்கிறது எடப்பாடி தரப்பு. ஆனாலும் பிடிகொடுக்காமலேயே இருக்கிறார்களாம் இந்த 2 அமைச்சர்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

%d bloggers like this: