காபி குடிச்சா மட்டும் போதாது இதெல்லாம் செஞ்சு பாருங்க! அசத்தும் காபி டிப்ஸ்

நம்மை உற்சாகப்படுத்தும் பானங்களில் ஒன்று காபி. காபி குடிப்பது என்பது பலருக்கும் அன்றாடம் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. காபிக்கு அடிமையானவர்கள் இன்று பலரும் இருக்கிறார்கள்.

காபியை குடிப்பதால் உடலுக்கு உற்சாகத்திற்கு மட்டுமல்ல காபி சருமத்திற்கும் மிகவும் நல்லது. காபி குடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா அதனை தவிர்க்காமல் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்திப்பாருங்கள்.

ஸ்க்ரப் :

காபி தூளை சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதால் சருமத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

காபித்தூளுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து சருமத்தில் நன்றாக தேய்த்து லேசாக மசாஜ் செய்திடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.

தலைக்கு :

இறந்த செல்கள் என்பது சருமத்தில் மட்டுமல்ல தலையிலும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் கவனிக்கும் பெரும்பாலானோர் தலையை மறந்துவிடுவார்கள். இதனால் தலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள் அவர்களுக்கு பொடுகுத்தொல்லை உட்பட பல்வேறு பிரச்சனை வருவதற்கு காரணமாக அமைந்திடும்.

தலைக்குளித்தப் பின்பு காபி டிகாஷனைக் கொண்டு முடியை அலசுங்கள். இல்லையென்றால் காபி பவுடரைக் கொண்டு தலையில் லேசாக மசாஜ் செய்திடுங்கள்

கண்கள் :

நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா அல்லது சோர்வாக இருக்கிறீர்களா என்பதை உங்களின் கண்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

கண்கள் கொஞ்சம் வீங்கியிருந்தால் எப்போதும் சோர்வாக இருப்பது போன்றே தெரியும். அதனை போக்க க்யூப் ட்ரேயில் தண்ணீருடன் சிறிது காபி பவுடரையும் கலந்து ப்ரீசரில் வைத்திடுங்கள். நன்றாக உறைந்ததும் அந்த ஐஸ் க்யூபை எடுத்து கண்களில் மெல்ல ஒத்தடம் கொடுத்திடுங்கள்.

சருமத்தை பொலிவாக்கும் :

காபி சருமத்தை பொலிவாக்குவதில் வல்லது. இரண்டு ஸ்பூன் காபித்தூளுடன் இரண்டு ஸ்பூன் பால் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதனை முகத்திற்கு அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம்.

%d bloggers like this: