Daily Archives: செப்ரெம்பர் 8th, 2017

எடப்பாடி அரசு கலையக் கூடாது என்பது டெல்லியின் விருப்பம்.. தினகரனிடம் கறாராக சொன்ன ஆளுநர்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலையக் கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருப்பதாக தம்மை சந்தித்த தினகரனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்; எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று தினகரன் சந்தித்து வலியுறுத்தினார். 3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பி.க்களுடன் ஆளுநரை தினகரன் சந்தித்தார்.

டெல்லி விருப்பம்

Continue reading →

நெஞ்சுச் சளி நீக்கும்; முகப்பரு விரட்டும் மிளகு!

த்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்த மருத்துவ மொழி. `பைப்பர் நிக்ரம்’ (Piper nigrum) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம்.
சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகளும் உண்டு.

Continue reading →

கடன் வாங்க கைகொடுக்கும் ஆப்ஸ்!

ங்கி, வங்கியாக ஏறி இறங்கியபின் கிடைக்கும் வங்கிக் கடன்கள், எந்தச் சிக்கலும் இன்றி உடனடியாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்தக் கற்பனையை நிஜத்தில் சாத்தியமாக்கியிருக்கின்றன சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். ஆன்லைன் மூலம் கடன் தரும் இரண்டு ஆப்கள் இங்கே…   

Continue reading →

சுலபத்தில் சொந்த வீடு… – கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெகுதூரக் கனவாக இருந்த ‘சொந்த வீடு’ தற்போது அருகில் காத்திருக்கும் அழகிய நிஜமாகிவிட்டது. காரணம், வீட்டுக் கடன் என்ற ஒன்று வங்கிகளில் இருப்பதையே அறியாமல் இருந்த காலம் போய், கடன் தரும் வங்கிகளே தங்களது வீட்டுக் கடன் நடைமுறையை விளம்பரம் செய்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி

Continue reading →

உற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்

ழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு  முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

Continue reading →

நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

ன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ், மனை, மக்கள் அனைத்தையும், ஒரு திருத்தலம் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்.

பட்டுக்குப் பெயர் பெற்ற இத்தலம், பக்திக்கும் பெயர்பெற்றதாக விளங்குகிறது. இத்தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயிலாகும். இக்கோயில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், ஜெயம் கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பை அப்படியே கொண்டிருக்கிறது.

Continue reading →