முதலிரவன்று ஏன் அதிக பூக்களை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

நம்முடைய சோம்பேறித்தனத்திற்காக நம்முடைய பழங்கால வாழ்க்கை முறையையே நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் நாகரிகம் என்ற பூச்சும் பூசப்படுவதால் பலரும் எந்த சமரசமுமின்றி மாறிக் கொண்டிருக்கின்றனர்.

முதல் மாற்றம் நம்முடைய உணவில் ஆரம்பித்தது படிப்படியாக முன்னேறிய மாற்றம் இன்று நம் படுக்கையறை வரை வந்துவிட்டது. முந்தைய காலத்தில் தரையில் பாயை விரித்து படுப்பது தான் வழக்கம் ஆனால் இன்றோ கட்டிலையும் மெத்தையும் நாடிக் கொண்டிருக்கிறோம்.

இதனால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு நன்மைபயக்கும் இயற்கையான பாயை வாங்காமல் ப்ளாஸ்டிக் பாய் பயன்படுத்துவதாலும் நம் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளைகிறது.

ஏன் இயற்கை பாய் :

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் தூங்கினால் நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு பல்வேறு மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.

அதனை பயன்படுத்தினால் நம் உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கிடைக்கும்.

Image Courtesy

வகைகள் :

வகைகள் :

பாய்களில் கோரைப் பாய்,பிரம்பு பாய்,ஈச்சம் பாய்,மூங்கில் பாய்,தாழம் பாய்,பேரிச்சம் பாய்,நாணல் கோரைப் பாய் என பல வகைகள் இருக்கின்றன. இது போன்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாயில் படுப்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

Image Courtesy

கோரைப் பாய் :

கோரைப் பாய் :

கோரைப்பாயில் தூங்கினால் உடல் சூடு போக்கி குளர்ச்சியை தரும். அதே போல பிரம்பு பாயில் படுத்தால் சீதபேதி நலம் பெறும்.

Image Courtesy

ஈச்சம் பாய் :

ஈச்சம் பாய் :

ஈச்சம் பாயில் தொடர்ந்து படுத்து தூங்கினால் வாதம் மற்றும் அது தொடர்பான நோய்கள் குணமாக. ஆனால் இது உடல் சூட்டை அதிகப்படுத்தி கபத்தை அதிகரிக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

Image Courtesy

மூங்கில் பாய் :

மூங்கில் பாய் :

மூங்கில் பாய் என்பது மூங்கில் கழிகளை லேசான குச்சிகளாக அறுத்துக் கொள்வர். இதில் படுத்தால் உடல் சூடு அதிகரிக்கும் என்பதல பெரும்பாலானோர் தூங்குவதற்கு பயன்படுத்த மாட்டார்கள்.

மாறாக அதிக வெளிச்சத்தை மறைக்க, அலங்காரத்திற்கு என இதனை பயனப்படுத்துவதுண்டு.

பனையோலை பாய் :

பனையோலை பாய் :

இதில் படுத்தால் பித்தத்தை போக்கி உடல் சூட்டை குறைத்திடும். அதே போல தென்னம் ஓலையில் செய்யப்பட்ட பாயில் படுத்தால் உடலின் தட்பவெட்பத்தை சமன் செய்திடும்.

 

முதலிரவு :

முதலிரவு :

முதலிரவின் போது படுக்கையில் நிறைய பூக்களை தூவுவது வழக்கம். இது வெற்று அலங்காரத்திற்காக அல்ல. ஆரம்ப காலங்களில் மன்னர்களின் படுக்கையறை இப்படியான மலர்களால் உருவாக்கப்பட்ட படுக்கையாகவே இருந்தது.

இப்படி பூக்கள் நிறைந்த படுக்கையில் தூங்குவதால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்!

கர்ப்பிணிகள் :

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இது போன்ற பாய்களில் படுத்தால் மூட்டு,முதுகு,தசை தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கலாம். உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

கர்ப்பிணிகள் படுத்தால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு

%d bloggers like this: