அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்!

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கட்சியை மீட்டெடுத்துள்ளார், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

இன்று காலை சுமார்.10.30 மணி அளவில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்பு ஆற்றினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கட்சியை மீட்டெடுத்துள்ளார், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மறைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். 125 கட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீர்மானத்தை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் வாசித்தார்.

ராமர், லட்சுமணன் போன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தமிழகத்தை காகாப்பாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வாசித்தார்.

முதல் தீர்மானமாக இரட்டை இலை மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க வின் இரு அணிகளும் இணைந்ததற்கு பொதுக்குழு ஒப்புதல். அதிமுக அம்மா, புரட்சி தலைவி அம்மா அணியை இணைத்து ஒரே கட்சியாக உருவாக்க வேண்டும் என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றம்

இன்றைய தீர்மானத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமனம் ரத்து என்ற தீர்மானம்

தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள்  செல்லாது

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அரசு எடுத்த முடிவுக்கும், அதற்காக ரூ.15 கோடி ஒதுக்கிய முதல்வருக்கும்  நன்றி தெரிவித்து தீர்மானம்

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்,  யார் யார் எந்தெந்த பொறுப்புகளில் இருந்தார்களோ அதே பொறுப்பில் தொடரலாம்.

வார்தா புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம்

ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து கட்சியை  காப்பாற்றியவர்களுக்கு நிர்வாகிகளுக்கு  நன்றி தெரிவித்தும் தீர்மானம்

சசிகலாவின்  பொதுச்செயலாளர்  நியமனம் ரத்து என்றும் தீர்மானம்.அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளரே கிடையாது என்று அதிமுகவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர். இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு உள்ளது.

அதற்காக அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதற்காக கட்சி விதி எண் 19-ல் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தும் தீர்மானம்.

அதற்காக வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு தலைவராக ஒபிஎஸ்சும், துணை தலைவராக இபிஎஸ்-க்கும் அதிகாரம் அளித்தும் தீர்மானம். ஒருங்கிணைப்பு தலைவர், துணைத்தலைவருக்கு பொதுச்செயலாள ருக்கான அதிகாரம் வழங்குவதாகவும் தீர்மானம்.

துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செயல்படுவார்கள் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்க இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம்.

வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம்.

ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்க இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம். ஒருங்கிணைப்பு தலைவராக ஒபிஎஸ்சும், துணை தலைவராக இபிஎஸ்-க்கும் அதிகாரம் அளித்தும் தீர்மானம்.

ஒருங்கிணைப்பு தலைவர், துணைத்தலைவருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்குவதாகம் தீர்மானம்.

பொதுக்குழுவில் 2148 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள் என கூறப்படுகிறது. சுமார் 95 சதவிகித செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: