Advertisements

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா… விலங்குகளின் கொழுப்பா? – எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. 

எல்லா உணவுப் பொருட்களைப் போலவே, நெய்யிலும் ஏகப்பட்ட கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக கடைகளில் விற்பனை செய்யப்படும் நெய்யில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. எலும்புத் துகள்கள், ரசாயனங்கள், குரங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு… போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளன.

பெரும்பாலும் டப்பாக்களில்  ‘இது சுத்தமான பாலின் கொழுப்பு’ (Milk fat) என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  ஆயுர்வேத மருத்துவப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் கூட Milk fat என்று போட்டே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நெய்க்கும், பாலின் கொழுப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஒருபோதும் நெய்யாகாது.

நெய்

முதலில் நெய் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

இதற்கு மிக முக்கிய மூலக்கூறு பால். அந்த பாலினை நன்றாகக் காய்ச்சி, பிறகு அதை ஆற வைத்து, அதில் ஒரு துளி தயிரைக் கலந்து ஆறு மணி நேரம் உறைய வைக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்துப் பார்த்தால் முழுவதுமாக அந்த பால் தயிராக மாறியிருக்கும். அந்தத் தயிரில் சிறிது நீர்விட்டு நன்றாகக் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும். அந்த வெண்ணெயை வாணலியில் இட்டுக் காய்ச்சினால் தனியாகப் பிரிந்து வரும். இதுவே உண்மையான முறை. இதற்குப் பதிலாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பை நெய்யாக்குவது சரியான முறை அல்ல. 

பாலைத் தயிராக்கி தயிரை வெண்ணெயாக்கி அதை நெய்யாக்குவதுதான் சுத்தமானது. இதற்குத்தான் நோய் தீர்க்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. மாறாக நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நெய்யை உண்டால்  உடலால் அதனை ஜீரணிக்க முடியாது. கொழுப்பாகவே உடலில் சேர்த்து வைக்கும். அது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். 

சராசரியாக 40 லிட்டர் பாலைத் தயிராக்கி பிறகு அதிலிருந்து வெண்ணெயை எடுத்து நெய்யாக்கினால்  ஒருகிலோதான் கிடைக்கும். ஆனால், வணிகம் என்று வந்து விட்டால் இதில் பெரிய லாபம் இல்லை. அதனால், இயற்கையான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக பாலில் இருந்து கொழுப்பை எடுத்து அதோடு  பல ரசாயனங்கள் மற்றும் விலங்கு கொழுப்புகளைச் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். 

கொழுப்பெடுத்தது போக, மிஞ்சும் பாலையும் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து கிடைக்கும் வழிகளில் எல்லாம் லாபம் பார்க்கிறார்கள். 

நெய்

ஆட்டுப்பால்,  எருமைப்பாலில் இருந்தும் இதைத் தயாரிக்கலாம். ஆனால் அதற்கு பெரிய மகத்துவம் இல்லை. நாட்டு மாடுகளின் நெய்யே நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும். இதுமாதிரியான உண்மையான பொருள் வேண்டுமென்றால்,  நாமே வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் பெற்று நெய்யாக்கிப் பயன்படுத்தலாம். 

நாட்டு மாடுகள் குறைந்த அளவு பாலையே கொடுக்கும். திமில்கள், மாடலான கழுத்து, கொம்புகள் உள்ள நமது நாட்டுக்குச் சொந்தமான ரகங்களில் இருந்து பெறப்படும் நெய்க்கே அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. இதுதான் உடலின் செல்களுக்குள் எளிதாக ஊடுருவி தேவையான அனைத்துச் சத்துகளையும் வழங்கும். தேவையற்றக் கழிவுகளையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றும்.

இந்த நெய்யை நாள்தோறும் உட்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். நரம்புகள், எலும்புகள் பலப்படும், மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீராகும், உடல் பருமன் சீராகும், இதய நோய், மூட்டு வலி சீராகும். அனைவரும் எதிர்பார்க்கும் ஒமேகா சத்துகள் இதில் உள்ளது அதுமட்டுமல்லாமல் பல வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் இதில் அடங்கியுள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: