தைராய்டு பாதிப்பு இருந்தால் நீங்கள் வீட்டில் அவசியம் செய்ய வேண்டியவை!

ஹைப்போ தைரய்டு. இதனை தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும் போது ஏற்படும். முன் கழுத்தில் இருக்கு தைராய் சுரப்பியில் போதுமான ஹார்மோன்கள் சுரக்காத போது இந்தப் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைந்தால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளே மாற்றம் ஏற்படும். உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. இந்த பாதிப்பு பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.

ஆண்களில், 60 வயது மேற்பட்டோருக்கு ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஹைப்போதைராய்டுக்காக வாழ்நாள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியது அவசியம்.

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தைராய்டு சுரப்பியை வேலை செய்ய வைக்க சில பயனுள்ள குறிப்புகள்.

அறிகுறிகள் :

ஹைப்போ தைராய்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், எப்போதும் சோர்வாக உணர்வீர்கள், லேசான குளிர் கூட உங்களால் தாங்க முடியாது, மலச்சிக்கல் உண்டாகும், சருமம் வறண்டு போகும், குரலில் மாற்றம் தெரியும், எடை அதிகரிக்கும், மன அழுத்தம் ஏற்படும், நகம் மற்றும் முடி வலுவிழந்து போகும்.

இஞ்சி :

இஞ்சியில் அதிகப்படியான ஜிங்க்,மக்னீஸியம், பொட்டாசியம் இருக்கிறது. இவரை தைராய் சுரப்பி வேலை செய்ய உதவிடும் .

சூப், டீ இஞ்சிச் சாறு என எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன் எண்ணெய் மாத்திரை :

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இவரை ஹைப்போதைராய்டுக்கு எதிராக போராடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை எடுத்துக் கொள்ளலாம்.

வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவிடும். அதோடு உடலில் இருக்கும் ஹார்மோன்கள் வேகமாக சுரப்பதற்கும் அவை துரிதமாக வேலை செய்வதற்கும் உதவிடும்.

இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஃபாட்டி ஆசிட் தைராய்டு சுரப்பி வேலை செய்வதற்கு வழிவகுக்கும். நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

இதனை பயன்படுத்துவதால் உடலின் டெம்பரேச்சர் அதிகரிக்கும். ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு உடல் டெம்பரேச்சர் குறைவாக காணப்படும்.

பால் பொருட்கள் :

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்கள் உடலுக்கும் தேவையான கொழுப்பு இன்னபிற மைக்ரோ நியூட்ரிசியன்கள் நிறந்திருக்கும்.

இவை தைராய்டு சுரப்பி வேலை செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

அஸ்பராகஸ் :

அஸ்பராகஸில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது . அத்துடன் அமினோ ஆசிட் இருக்கிறதுஅவை ஹைப்போ தைராய்டுக்கு எதிராக செயல்படும்.

பூண்டு :

பூண்டில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் சில நுண்ணியிர்கள் தைராடு சுரப்பு குறைவாதல் கழுத்து வீங்குவதை தடுக்கும்.

பூண்டை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.

நட்ஸ் :

நட்ஸில் இருக்கும் ப்ரோட்டீன் தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் சுரக்க வழி வகுக்கும். தினமும் வெவ்வேறு வகையான் நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஹைப்போதைராய்டு பாதிப்பிலிருந்து மீள முடியும்.

பீன்ஸ் :

பீன்ஸில் ப்ரோட்டீன், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், கார்போஹைட்ரேட், ஃபைபர்,விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. இவரை நம் உடலுக்கு எனர்ஜியை கொடுத்திடும்.

ஹைப்போ தைராய்டினால் எப்போதும் எனர்ஜி குறைவாக சோர்வாக இருப்பவர்கள் பீன்ஸ் தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

%d bloggers like this: