ஜனாதிபதி சந்திப்புக்குப் பிறகு பாருங்கள்!” – தினகரன் அணியின் திடீர் வியூகம்!
ஆட்சியைக் கலைப்பதுதான் இனி அடுத்தகட்ட நடவடிக்கை” என்று தாம் எடுத்துள்ள முடிவைச் செயல்படுத்தத் தயாராகிவருகிறார் டி.டி.வி.தினகரன். தமிழக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், ஜனாதிபதியைச் சந்திக்கப் புறப்படுகிறது தினகரன் அணியின் எம்.எல்.ஏ-க்கள் படை.
அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா குடும்பத்தை அந்தக் கட்சியில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவுள்ளனர். இதனால் இனி சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் தொடரமுடியாது. மேலும், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பதவியும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
எதையும் தாங்கும் இதயம் பெறுவோம்!
ஓய்வில்லாது இயங்கக்கூடிய உறுப்பு இதயம். மனித உடலின் மகத்தான எந்திரமான இதயத்தைப் பாதுகாத்து, தடைபடாது இயங்கச் செய்வது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது.
இதயத்தின் செயல்பாடு, இதய நோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், இதய ஆரோக்கியம் காக்கும் முறைகள் என எல்லாத் தகவல்களையும் பார்ப்போம்.
கைக்குள் அடங்கும் இதயம்!
வீடு சுத்தமாக இல்லையா? – உங்கள் எடை கூடும்!
அதிக எடை அல்லது பருமன் ஏற்படுவதற்கு டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சர்யமான காரணம் அறியப்பட்டுள்ளது. அது வீட்டில் ஆங்காங்கே காணப்படும் தூசு!
மண்டிக்கிடக்கும் தூசுவில் உள்ள ஒரு மாசுப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்டோகிரைன் டிஸ்ரப்டிங் கெமிக்கல்ஸ் (EDC) என்கிற அப்பொருள் நம் உடலின் நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களைப் பாதிக்கும் தன்மை உடையது. இதனால் நோய் எதிர்ப்புசக்தி முதல் இனப் பெருக்கம், நரம்பியல் செயல்பாடுகள் வரை சகலமும் பாதிக்கப்படுகின்றன. சிறுவயதிலேயே EDC வகை நச்சுத்தன்மை உடைய தூசுகள் உடலில் புகுந்தால், அடுத்துவரும் ஆண்டுகளில் உடல் எடை அதிகமாகும் என்றும் அறியப்பட்டுள்ளது.
உங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்!!
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம்.
இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.