Daily Archives: செப்ரெம்பர் 15th, 2017

கலப்படம் அறிவோம்

ட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்கூட நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருள்களை அதிகவிலை வைத்து விற்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டப்படி தண்டனைக் குரிய குற்றங்கள்தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று கலப்படம். பால் முதல் மருந்துப் பொருள்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம், நுகர்வோரின் உடல்நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியது என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.

Continue reading →

உங்கள் உடலில் புரதம் குறைவாக இருக்கிறது என எப்படி அறிந்துக் கொள்வது?

நமது உடலுக்கு எல்லா சத்துக்களும் தேவை. ஒவ்வொரு சத்தும், உடலின் ஒவ்வொரு பகுதி மற்றும் உறுப்பிற்கு வலு சேர்த்து ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றன.

நீங்கள் சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல், பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோர்வாக உணர்ந்திருப்பீர்கள். கணினி முன்னர் அமர்ந்து வேலை கூட பார்க்க முடியாது.

Continue reading →

தினமும் முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

சருமத்தை பாதுகாக்க நாளுக்கு நாள் புதுப்புது அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய வேகமான இயந்திரத்தனமான வாழ்க்கையை காரணம் காட்டி சந்தையில் புதுப்புது ப்யூட்டி ப்ராடெக்ட்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.

நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவதாலும் பயன்படுத்த எளிதாக இருப்பதாலும் அப்படியான பொருட்கள் வாங்க மக்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படியான ப்யூட்டி ப்ராடெக்ட்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கின் கேர் வைப்ஸ்.

வைப்ஸ் :

Continue reading →

கர்ப்பகால முதுகுவலி – ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்

ருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச்

Continue reading →

மிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்

பிரபல இயற்பியலாளரும் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்றழைக்கப்படுபவருமான எட்வர்ட் டெல்லர், “இன்றைய அறிவியல் தான்… நாளைய தொழில்நுட்பம்” எனச் சொல்லியிருப்பார். இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன், பல ஆண்டுகளாக அறிவியல் உலகத்தில் நடந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான் நமக்குக் கிடைத்தது.இது போல, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள்தான் இன்றைய ஆராய்ச்சிகளின் ஆணிவேர். இவைதாம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

Continue reading →

வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

முற்பிறவி கர்மவினைகளே இப்பிறவியின் பலாபலன்களுக்குக் காரணமாக அமைகின்றன என்கின்றன நம் ஞான நூல்கள். முற்பிறப்பில் செய்த பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப, அவற்றுக்கு உகந்த பலாபலன்களை வழங்கும் வகையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் நிலையில்தான், ஓர் உயிர் இப்புவியில் ஜனிக்கிறது. அந்த தருணத்தை அடிப்படையாகக்கொண்டே ஜனன ஜாதகம் கணிக்கப்படுகிறது.

Continue reading →