தினமும் முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

சருமத்தை பாதுகாக்க நாளுக்கு நாள் புதுப்புது அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய வேகமான இயந்திரத்தனமான வாழ்க்கையை காரணம் காட்டி சந்தையில் புதுப்புது ப்யூட்டி ப்ராடெக்ட்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.

நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவதாலும் பயன்படுத்த எளிதாக இருப்பதாலும் அப்படியான பொருட்கள் வாங்க மக்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படியான ப்யூட்டி ப்ராடெக்ட்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கின் கேர் வைப்ஸ்.

வைப்ஸ் :

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

கெமிக்கல்கள் :

ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதோடு ஈரமாக இருப்பதல பூஞ்சைகள் வராமல் தடுக்க ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும்.

இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த வைப்ஸ் அதிக வாசத்துடன் இருக்கும். சில வைப்ஸ்களில் பாக்டீரியா உருவாகாமல் தடுக்க அல்கஹால் பயன்படுத்தப்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

சுத்தமாகாது :

தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது.

சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

இயற்கைக்கு ஆபத்து :

எளிதாக அப்புறப்படுத்தலாம், பயன்படுத்திய உடனேயே தூக்கிப்போடலாம் என்று தான் இதனை பெரும்பாலும் வாங்குகிறார்கள். இப்படி அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படும். இது ப்ளாஸ்டிக்கை ஒத்த பாதிப்பை ஏற்படுத்திடும்.

கண்கள் :

கண்களுக்கு போடப்படும் மேக்கப் கலைய இந்த வைப்ஸ் தொடர்ந்து பயன்படுத்தினால் அது கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

கண்களைச் சுற்றி இருக்கும் சருமம் மிகவும் மெல்லியதாக காணப்படும். முகத்தில் இருக்கும் சருமத்தை விட பத்து மடங்கு மெல்லியது கண்களுக்கு அருகில் இருக்கும் சருமம். அங்கு ஏற்கனவே ஐ மேக்கப் கெமிக்கல் இருக்கும் மேலும் கெமிக்கல் நிறைந்த இந்த வைப்ஸ் கொண்டு துடைப்பதினால் கண்களுக்கு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

சருமப் பிரச்சனை :

வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.

முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்குவதற்கு பதிலகா அது மேலும் மேலும் பரவவே செய்கிறது.

%d bloggers like this: