அக்டோபரில் பொதுக்குழு!’ – எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலிருந்து ‘ரெட் அலெர்ட்’
அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்டோபரில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளார் சசிகலா. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைக்க சசிகலா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
துளிர்க்கப்போகும் இரட்டை இலை” – தினகரனுக்கு அடுத்த ஷாக்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானம், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்ற அடுத்தடுத்த அதிரடிகளால் முடங்கிக் கிடந்த இரட்டை இலைச் சின்னம், மீண்டும் துளிர்க்கப்போகிறது.
கண்ணன் சொன்ன விரதம்! – புரட்டாசி வழிபாடுகள்
புரட்டாசி என்ற பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்குவருவது திருவேங்கடவனும் திருமலை திருப்பதியும்தான். மட்டுமின்றி, பிரம்மோற்ஸவம், கருடசேவை வைபவம் என பெருமாளுக்கான திருவிழாக்கள் என்று புண்ணிய புரட்டாசி களைகட்டும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு, அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும் என்று பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருவிழாவும் சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரீஸ்வர விரதமும் வருவது புரட்டாசி மாதத்தில்தான். மேலும், முன்னோர் ஆசியைப் பெற்றுத் தரும் மஹாளயபட்சம் இடம்பெறுவதும் இந்த மாதத்தில்தான்.