கண்ணுக்குத் தெரியாத சில உயிர்ச்சத்துகளின் தேவை குறைவாக இருந்தாலும் அவற்றின் சேவை பெரிதாக இருக்கும். அப்படியான மிக முக்கிய உயிர்ச்சத்துகளில் ஒன்று லைசின் எனும் அமினோ அமிலம். லைசின் நமது உடல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புரதச்சத்தாகும். அரிசி மற்றும் கோதுமை உணவுகளில் இந்தச் சத்து கிடைத்தாலும் பருப்பு, பால், சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் போதிய அளவுக்கு லைசினைப் பெறமுடியும்.
லைசினின் பயன்கள்
* உணவின் மூலம் நமது உடம்புக்குக் கிடைக்கும் கால்சியம் சத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
* ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்ற எலும்பு மென்மையாகும் நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
* தசை வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
* வலி நிவாரணியாகப் பயன்படுகிறது.
* போதைப் பழக்கத்தை மறக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* அக்கி எனும் அம்மை நோயைக் குணப்படுத்தவும் தொண்டை வலியைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
லைசின் குறைவினால் வரும் பிரச்னைகள்
* கால்சியம் உறிஞ்சப்படுவது குறைவதால் எலும்பு மென்மையாகிவிடும்.
* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* கண்பார்வை மங்கலாகும்.
* புண்கள் எளிதில் ஆறாது.
* உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* தசைச்சோர்வு ஏற்படும்.
எதில் லைசின்?
* புரதச்சத்து நிறைந்த உணவுகளில் அதிகம் இருக்கும்.
* முட்டை, இறைச்சி, மத்தி மீன் (Sardine Fish), கோழிக்கறி.
* சோயா, பட்டாணி.
* பால், சீஸ், பனீர்.
* ஈஸ்ட், கோதுமைத்தவிடு.
* கோதுமை மற்றும் சோளத்தில் குறைந்த அளவு இருக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு லைசின் தேவை?
* குழந்தைகளுக்கு (3-4 மாதம்) 103 மி.கி./ஒரு கிலோ உடல் எடைக்கு.
* குழந்தைகளுக்கு (2 வயது – 9 வயது) 64 மி.கி./ஒரு கிலோ உடல் எடைக்கு.
* இளம் பருவம் முதல் 10 வயது முதல் – 12 மி.கி./ஒரு கிலோ உடல் எடைக்கு.
* ஆண்- பெண் அனைவருக்கும் 0.84 கிராம் (ஒரு நாளைக்கு).