கனவு தவிர்… நிஜமாய் நில்!

பருவ வயதில், பார்க்க வேண்டியது!
பெண் குழந்தை பருவம் அடையும் வயது, 12. தற்போதைய, வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் என்று பல காரணங்களால், ஓரிரு ஆண்டுகள் முன்னதாகவே, குழந்தைகள் பருவமடைகின்றனர். 10 வயதிற்கு முன்பே, 8 வயதிலும் கூட பருவமடையும் குழந்தைகளை தற்போது பார்க்க முடிகிறது.

கடந்த, 15 ஆண்டுகளில், நடுத்தர மற்றும் மத்திய தர மக்களின் வாழ்க்கையில், பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பெற்றோர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள், வெளியில் அழைத்துச் செல்லும்போது, அதிக கலோரி உள்ள உணவுகள் வாங்கித் தருகின்றனர். வாகன வசதி, மின் சாதனப் பொருட்கள் என்று குழந்தைகளுக்கு வசதிகளை செய்து தருகின்றனர். இதனால், விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட வயதிற்கு முன்னதாகவே பருவம் அடைந்து விடுகின்றனர். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும், உடல், மன வளர்ச்சி இது.
பருவம் அடைந்தது முதல், அடுத்த ஒன்பது மாதங்கள் அல்லது ஒரு ஆண்டில், 24 முதல் 30 நாட்களுக்குள் மாதவிடாய் வருவது, மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு சீரான ரத்தப் போக்கு என்று, மாதவிடாய் சுழற்சி ஒழுங்கிற்கு வந்துவிட வேண்டும். அப்படி இல்லாமல், சீரற்ற மாதவிடாய், அதிக வலி என்று வழக்கத்திற்கு மாறாக, பிரச்னை இருந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
இந்த பருவத்தில், இரும்புச்சத்து மிக்க, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பால், முட்டை, மீன் என்று அத்தியாவசிய உணவுகளைத் தர வேண்டும். ‘அனீமியா’ எனப்படும் ரத்த சோகை, பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கும் பிரச்னையாக உள்ளது.
பருவமடைந்த ஓரு ஆண்டுற்கு பின், அதிக ரத்தப் போக்கு, மாதவிடாயின்போது வலி இருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, தீர்வு பெற வேண்டும். பருவமடைந்த உடனேயே, சுய சுகாதாரம் குறித்து, குழந்தைகளுக்கு தெளிவாக கற்றுத் தர வேண்டியது அவசியம்.

2 responses

  1. All have responsiblity fitting to their level of social standing and you have to relook.

  2. misleading headlines. Nothing to do with the subject in any manner. Insult to a great personality. Unbecoming to a blog of your nature.Kindly take care & avoid.

%d bloggers like this: