மூல நோய், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் ஆகாயத்தாமரை!

ஆகாயத்தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக காணப்படும். இதனை வீணான பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இதன் அற்புதமான பலன்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

புண்களுக்கு

ஆகாயத்தாமரையின் இலையை நன்றாக அரைத்து கரப்பான், தோல் நோய் போன்ற புண்களின் மீது வைத்துக்கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.

மூலநோய்

மூலநோய்க்கு மருந்து தேடி அலைபவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் கிடைக்க கூடியதும் கூட, மூலநோய்க்கு ஆசனவாயில் இதன் இலையின் சாறை வைத்து கட்டினால் குணமடையும்.

மார்பக பிரச்சனை

பெண்களின் மார்பினுள் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத்தாமரையின் இலை சாற்றை சிறிது தேன் கலந்து தினமும் காலை, மாலை குடித்தால் கிருமிகள் அழிந்துவிடும். மேலும் நீர் சுருக்கு, மூலம், சீதபேதி ஆகியவை குணமாகும்.

கண் எரிச்சலுக்கு..

ஆகாயத்தாமரையின் இலையின் சாறு 400 மில்லி மற்றும் நல்லெண்ணெய் 800 மில்லி சேர்த்து இளஞ் சூடாக தீயிட்டு காய்ச்சி, கிச்சிலி கிழங்கு, சந்தனதூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி என ஒவ்வொன்றையும் 8 கிராம் எடுத்து காய்ச்சி, குளிர்வித்து தினமும் காலை, மாலை தலைக்கு தேய்த்து வர உட்சூடு, கண் எரிச்சல், மூலம் ஆகியவை குணமாகும்.

%d bloggers like this: