Daily Archives: ஒக்ரோபர் 1st, 2017

வயோதிகம் வரம்…! முதியோர் நலம் பேணுவோம்! #InternationalDayofOlderPersons

நீ இருக்க…
ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்..!
நான் இருக்க…
ஓர் இருட்டறை
கூடவா இல்லை
உன் வீட்டில்..?’
– இந்தக் கவிதையைப்போலவேதான் இருக்கிறது இன்றைய முதியோரின் வாழ்க்கை. `மூத்த குடிமக்கள்’ என்று அழைக்கப்படும் முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை சர்வதேச முதியோர் தினமாக வரையறை செய்துள்ளது.  அதன்படி உலகம் முழுவதும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Continue reading →

புற்றுநோய், மாரடைப்பு தவிர்க்கும் ரத்த தானம் என்கிற மகா கொடை!

நமது உடலில் திரவ வடிவில், எப்போதும் ஓய்வின்றி உடலுக்குள் நகர்ந்துகொண்டே இருக்கும் ஓர் உறுப்பு… ரத்தம். நீர் உயிர்வாழத் தேவையான அடிப்படை ஆகாரம். அதேபோல் ரத்தம் நாம் உடல் இயங்கத் தேவையான அடிப்படை உறுப்பு. அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் செல்லும் பெரும் பணியை ரத்தம் செய்கிறது. ரத்தம், . ரத்தம் இன்றி செயல்படும் உறுப்புகளும் இல்லை; ரத்தம் இல்லாது இருக்கும் உறுப்புகளும் இல்லை. 

இன்று தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினம்.

Continue reading →

சசிகலாவுக்காகப் போராடும் காங். புள்ளி.. பரோலுக்குப் பதில் சொன்ன கர்நாடக அரசு தரப்பு!

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா. ‘ கணவரைப் பார்ப்பதற்காக பரோலில் வரும் எண்ணத்தில் இருக்கிறார் சசிகலா. அவரது விண்ணப்பம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரது பரோலுக்காக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!

ம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.

நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.

Continue reading →

உதட்டின் நிறம் சிவப்பாக மாறிட உதவும் அழகுக் குறிப்புகள்!!

முக வசீகரத்தை அதிகரிக்கை செய்வதில் முக்கிய பங்கு இதழில் தவழும் புன்னகைக்கு உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை. புன்னகையை சுமக்கும் உதடுகள் கருமையாக அல்லது அடர்ந்த நிறத்தில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை.

அழகான பிங்க் நிற உதடுகளை தான் அனைவருக்கும் பிடிக்கும். இத்தகைய உதடுகள் இல்லாத பெண்கள் பொதுவாக உதட்டு சாயம் மூலம் தற்காலிக அழகை பெற்று கொள்கிறார்கள்.

Continue reading →

ஜி.எஸ்.டி விதிமீறல்… எவ்வளவு அபராதம்?

ஜி.எஸ்.டி வரிச் சட்டப்பிரிவு 122-ன்படி, 21 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. குறைந்தபட்ச அபராதமாக 10,000 ரூபாயும், அதிகபட்ச அபராதமாக எவ்வளவு வரி இருக் கிறதோ அல்லது வரி ஏய்க்கப்பட்டிருக்கிறதோ, அது அதிகபட்ச வரியாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்திலும் தனித்தனியாக வசூலிக்கப்படும். 

Continue reading →