Advertisements

ஆல்பா லினோலினிக் அமிலம்

.எல்.ஏ. எனப்படும் ஆல்பா லினோலினிக் அமிலம், மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் ‘அவசியமான கொழுப்பு அமிலமாக’ இது கருதப்படுகிறது.
முதல் மாரடைப்பு வந்தவர்களுக்கு இரண்டாம் முறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆல்பா லினோலினிக் அமிலத்தின் பயன்கள்

 

* இதயத்தின் ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புக் கட்டிகளைக் கரைக்கப் பயன்படுகிறது.
* கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கிறது.
* ‘ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்’ எனும் மூட்டுவலியைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
* சர்க்கரை நோய், Sclerosis எனும் நரம்பு நோய், சிறுநீரக நோய் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
* COPD எனும் நுரையீரல் நோய், சருமப் புற்றுநோய், சோரியாசிஸ், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
* ஆண்களுக்கு விரைப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஆல்பா லினோலினிக் அமிலக் குறைவினால் வரும் பிரச்னைகள்

* இதயநோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிக்கும்.
* முதல்முறை ஹார்ட் அட்டாக் வந்ததுமே ஆல்பா லினோலிக் அமிலக் குறைபாடு இருக்கிறதா எனச் சரிபார்க்கப்பட  வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாவது அட்டாக் சீக்கிரமே வரும்.
எதில் ஆல்பா லினோலினிக் அமிலம்?
* அக்ரூட், சியா போன்ற கொட்டை வகைகள்.
* வெஜிடபிள் எண்ணெய் – சோயாபீன் எண்ணெய், கனோலா, ஆளிவிதை எண்ணெய்.
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி.
* ஈஸ்ட்.
ஒரு நாளைக்கு எவ்வளவு ஆல்பா லினோலினிக் அமிலம் தேவை?
நாம் உண்ணும் உணவின் கலோரியில் ஒரு சதவிகிதம்  ஆல்பா லினோலினிக் அமிலம் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 2,000 கிலோ கலோரிகள் உணவு சாப்பிடுகிறோம் என்றால் அதில் இரண்டு கிராம் ஆல்பா லினோலினிக் அமிலம் இருக்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: