Daily Archives: ஒக்ரோபர் 4th, 2017

என்ன செய்யப் போகிறார்..?

முதல்வர் மீது கவர்னர் கோபம்?’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே?” என்றபடியே வந்து அமர்ந்தார், கழுகார்.
“கவர்னர் மாற்றத்தில் என்ன நடந்ததாம்?”
“அதுபற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தேனே! முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை. அதுபற்றி, எடப்பாடி டெல்லியில் தொடர்ந்து குறைபட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ‘அவர், லேசாக சசிகலா குடும்பத்துடனும் இணக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்’  எனச் செய்திகள் கிளம்பின. இந்த நேரத்தில்,

Continue reading →

இந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்!

நரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் .

நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும். வாருங்கள்! அதன் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

மருதாணி பேக் :

Continue reading →

இரவிலும் நீளும் அழகு

ரபர  வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக,  பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச்

Continue reading →

சீரான ஆரோக்கியம் தரும் சியா விதைகள்

சிறப்பான உணவுகளில் ஒன்றாக மாறிவருகிறது சியா விதை. அதில் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும், ஆற்றல் ஊக்குவிக்கும் திறன்களும் மிகுந்திருக்கின்றன. சியா விதைகள் சால்வியா  என்னும்  தாவரத்திலிருந்து கிடைக்கும் சிறிய கருப்பு விதைகள் ஆகும். சால்வியா  தாவரம் புதினா குடும்பத்தைச்  சேர்ந்தது. இது, பழங்கால மாயர்களின்  பிரதான உணவாக இருந்தது என்றும்   அவற்றை ஆற்றலின்  ஆதாரமாகப் பயன்படுத்தினர் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போருக்குச் செல்லும்போது  அரசர்களும் வீரர்களும் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

Continue reading →

நம்ம சாப்பிடறது உணவா? விஷமா? அதிர்ச்சி தரும் உணவுப் பொருட்கள்!

எல்லாருக்கும் இன்ஸ்டண்ட் மீது தனி அபிப்ராயம் உண்டு. எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்திட வேண்டும். அதிலும் வியாபரிகளுக்கு இதில் கொஞ்சம் அதிக நாட்டம் உண்டு என்றே சொல்லலாம்.

 

தனிப்பட்ட லாபத்திற்காக அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கலப்படம் சேர்க்கிறார்கள். சமையலுக்காக, நாம் பயன்படுத்தும் பொருளில் என்னென்ன கலப்படம் செய்கிறார்கள் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading →