Advertisements

உளவு போலீஸ் தீவிர கண்காணிப்பு பெட்டி பாம்பாக அடங்கினார் சசி!

மத்திய, மாநில உளவு போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, ‘பரோலில்’ வந்துள்ள சசிகலா, பெட்டி பாம்பாக அடங்கியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, உடல் நலக்குறைவால், உயிருக்கு போராடி வரும் கணவர் நடராஜனை பார்க்க, ஐந்து நாள் பரோலில் வந்துள்ளார்.
சிறையில், சசிகலாவுடன் தங்கி உள்ளவர் இளவரசி. அவரின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னை, தி.நகரில் உள்ளது; அந்த வீட்டில் தான், சசிகலா தங்கியுள்ளார்.

 

அங்கிருந்து நேற்று முன்தினம், சென்னை, குளோபல் மருத்துவமனைக்கு காரில் சென்று, கணவர் நடராஜனை சந்தித்தார். 2 வது நாளாக நேற்றும், காலை, 10:45 மணிக்கு, மருத்துவ மனைக்கு சென்ற அவர், மதியம், 2:15க்குவீடு திரும்பினார்.
பரோலில் வந்துள்ளதை பயன்படுத்தி, முதல்வர், பழனிசாமி அரசுக்கு எதிராக, தினகரன், திவாகரன் உள்ளிட்ட உறவினர்கள் வாயிலாக, சதி திட்டம் தீட்டலாம் என்பதால், அவரின் நடவடிக்கைகளை, மத்திய, மாநில உளவு போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். இந்த கெடுபிடி காரணமாக, சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில், பெட்டிப் பாம்பாக அடங்கியுள்ளார் சசிகலா. தான் தங்கியுள்ள வீட்டிற்கு வரும் உறவினர்களை மட்டுமே சந்தித்துவருகிறார்.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகை யில், ‘சசிகலா தண்டனை கைதி. பரோலில் வந்த அவர், அமைதியான முறையில் கணவரை சந்தித்து விட்டு, மீண்டும் சிறைக்கு செல்வதே நல்லது’ என்றனர்.அதே நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெ., சொந்தமான சொத்துக்களின் விபரம் மற்றும் கொடுக்கல்வாங்கல் பிரச்னைகள் அனைத்தும், சசிகலாவுக்கே தெரியும். அதனால், சொத்துக் களை நிர்வகிப்பது, பணம் தர வேண்டியவர் களிடம் வசூலிப்பது தொடர்பாக உறவினர்கள், ஜெய் ஆனந்த், விவேக், தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோருடன், சசிகலா ஆலோசனை நடத்தியதாகவும், குடும்பத்தினர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisements
%d bloggers like this: