Daily Archives: ஒக்ரோபர் 11th, 2017

சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? – பயத்தில் எடப்பாடி!

சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம்.
‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’

Continue reading →

இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேஷன்

முதல் முறையாக பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் ஆடுமாடுகளை புகைப்படம் எடுத்து அனுப்பி தீர்வு பெரும் வசதி

விவசாய பயிர்கள் மற்றும் ஆடுமாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை விவரித்து சொல்ல முடியாத விவசாயிகளுக்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தை இப்கோ கிஸான் நிறுவனம்’ செய்துள்ளது. அது தான் “இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேஷன்”.

இந்த அப்ளிகேஷனில் உள்ள நிபுணர் பகுதியின் மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களில் ஏதேனும் நோய் அல்லது பூச்சிகளின் பாதிப்புகள் ஏற்ப்பட்டு இருந்தாலோ அல்லது கால்நடைகளில் ஏதேனும் நோய் தாக்கம் ஏற்ப்பட்டு இருந்தாலோ அதை தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத்து வடிவில் டைப் செய்து, அனுப்ப முடியும். எழுத்து வடிவில் தெரிவிக்க முடியாதவர்கள், அந்த பாதிப்புகளை புகைப்படம் எடுத்து வல்லுனர்களுக்கு அனுப்பலாம். அதற்கான தீர்வை, அதே அப்ளிககேசன் மூலம் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த நிபுணர் பகுதி மட்டும் இல்லாது இன்னும் பல பயன்பாடுகள் இருக்கு,

குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பகுதி, மண்டி நிலவரம் , ஆலோசனை பகுதி, கியான் பந்தர், சந்தை பகுதி (marketing), வேலை வாய்ப்பு, விவசாய வாய்வழி தகவல்கள் மற்றும் பல பகுதிகளும் உள்ளது.

® வானிலை முன்னறிவிப்பு பகுதி 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ள முடியும்.

® ஆலோசனைப் பகுதியில் இப்கோ கிஸான் வழங்கும் விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொள்வதோடு, ஆடியோ வசதியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

® .கியான் பந்தர் பகுதியில் ஒரு பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

® சந்தை பகுதியில் உங்களிடம் உள்ள விவசாய விளைப்பொருட்களை விற்கலாம், மற்றவர்களிடமிருந்து வாங்கலாம்.

® விவசாயம் தொடர்பான அரசு திட்டங்கள், மானியங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் செய்தி பிரிவில் படித்து தேர்ந்து கொள்ளலாம்.

இவ்வளவு பயன்பாடுகள் உள்ள அப்ளிகேஷனை உங்கள் ஆன்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோட் செய்ய, Google Play store-ல் IFFCO KISAN”என்றுடைப் செய்து டவுன்லோட் செய்து Ref.Code இடத்தில் 2201 என்று டைப் செய்து, உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மேலும் இதை பற்றின விவரங்களுக்கு 534351 அல்லது 9791735144 என்ற எண்ணை அணுகவும்.

clip_image002 clip_image004

நேரிடையாக DOWNLOAD செய்ய

http://www.iffcokisan.com/IFFCO_Kisan_UAT_1.2.apk  .

———————————————————————————————

கூகிள் ப்ளே ஸ்டோரில் DOWNLOAD செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.IFFCOKisan&hl=en

மணியைப் பார்த்து ‘மணி’யை வளர்ப்போம்!

ம் வாழ்க்கையானது காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றும்  நிர்வகிக்கப்படுகிறது. காலம் என்பது முன்னே சென்றுகொண்டே இருக்கிறது; அது எப்போதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை.  

அதேபோல, நமது வாழ்க்கையும் படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கி சென்றுகொண்டே  இருக்கவேண்டும். நாம் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், வாழும் காலத்தில் முறையாகவும், மற்றவர்கள் பாராட்டும்படியும் வாழ முயற்சி செய்கிறோம். 

Continue reading →

அழகுக்கு இல்லை அறுவை சிகிச்சை!

உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என, வழக்கமான வழிமுறைகளைத் தாண்டி, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையும் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகள், அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. உடல் பருமன் குறித்து, அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.’ஒபிசிட்டி’ எனப்படும்,

Continue reading →