Advertisements

இருமல்

ருமல்… நமக்கு மட்டுமல்ல… அருகில் இருப்போருக்கும் எரிச்சலை உருவாக்கும். அலுவலகம் நிசப்தமாக இருக்கும்; எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். திடீரென ஒருவர் தொடர்ச்சியாக இருமினால், அனைவருக்கும் நிச்சயம் மனக்கஷ்டம் ஏற்படும். இருமல் இயற்கையாக ஏற்படக்கூடிய ஒன்றுதான். என்றாலும் அக்கணம் அதை யாரும் சிந்திப்பதில்லை. குறைந்தபட்சம் மனதிற்குள்ளாவது திட்டித் தீர்ப்பார்கள்.

தொடர்ச்சியாக இருமல் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அதைத் தடுக்க என்னதான் வழி?
நுரையீரல் சிறப்பு மருத்துவர் சதீஷ்குமார் தரும் விளக்கங்களை இங்கே பார்ப்போம்.

இருமல் ஏற்படக் காரணம் என்ன?
இயல்பாக நுரையீரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஓர் அசாதாரணச் செயல் நடந்தால், அதற்கு எதிர்வினையாக இருமல் ஏற்படுகிறது. இந்த அசாதாரண நிகழ்வு தூசியால் (Dust) ஏற்படலாம். தொற்றுக் (Infection) காரணமாகவும் ஏற்படலாம். ஆஸ்துமா தொந்தரவுகள், இதயம் சம்பந்தமான நோய்கள், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பாதிப்புகள் இருந்தாலும் இருமல் வர வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா, காசநோய் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக இருமல் இருக்கும்.
இருமலில் நிறைய வகைகள் உண்டா?
ஆமாம். அதன் தன்மைக்கேற்ப சிகிச்சையும் வேறுபடும்.
* வறட்டு இருமல் (Dry cough)
* சளியுடன் கூடிய இருமல் (Cough with sputum)
* எரிச்சலூட்டும் இருமல் (Irritant cough)
வாய்வுத்தொல்லை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அலர்ஜி ஆகியவற்றால் வறட்டு இருமல் ஏற்படும். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் வறட்டு இருமல் இருக்கும். வைரஸ், பாக்டீரியாத் தொற்றுகளால் அதிகமாகப் பாதிக்கப்படும்போது சளியுடன் கூடிய இருமல் உண்டாகும். காலை உறக்கம் கலைந்து கண் விழித்தபோதும் இரவு தூங்கும்போதும் தொண்டை வறண்டு போகும்போதும் எரிச்சலூட்டும் இருமல் ஏற்படும். இதுவும் ஏறக்குறைய வறட்டு இருமலாகத்தான் இருக்கும்.

இருமல் மருந்தின் வகைகள் பற்றிச் சொல்லுங்களேன்…

இருமல் மருந்தில் இரண்டுவகை உள்ளன. ஒன்று இருமலுடன் சளியை வெளியேற்றக்கூடிய மருந்து. மற்றொன்று இருமல் ஏற்படுவதையே தடுத்து நிறுத்தக்கூடிய மருந்து. இதில் சளியுடன்கூடிய இருமலுக்கு முதல்வகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சளி வெளியேறும். வறட்டு இருமலுக்கு இருமலையே தடுத்து நிறுத்தும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சளி உடலில் அதிகமாகச் சேர்ந்திருக்கும்போது ‘Expectorant’ வகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். இது சளியை வெளியேற்றும். அதேபோல் இருமித் துப்பும்போது சளியுடன் ரத்தம் கலந்து (Hemoptysis) வந்தால், இருமலைக் கட்டுப்படுத்தும் ‘Cough suppressants’ மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்தம் இல்லாமல் சளி மட்டும் வெளியேறும்போது இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. அது சளி வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதனால் சளி அதிகரிக்கவே செய்யும். சளி இல்லாத வறட்டு இருமலாக இருக்கும்போது ‘Expectorant’ வகை மருந்துகளைப் பயன்படுத்தினால், எந்தப் பயனும் ஏற்படாது. இந்தவகை இருமலுக்கு நுரையீரலின் செயல்பாட்டைப் பரிசோதனை (Pulmonary Function Test) செய்ய வேண்டும். பின்னர் அதற்குத் தகுந்தவாறு, நுரையீரல் சுவாசத்தை விரியச் செய்யும் Bronchodilators மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இருமல் மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
இருமல் மருந்தைத் திறந்துவிட்டால், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும். எக்ஸ்பையரி டேட் இருந்தாலும்கூட நாம் அதிக நாள்கள் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால் பக்கவி ளைவுகள் ஏதும் ஏற்படாது. ஆனால், அந்த மருந்தால் எந்தப் பயனும் இல்லை. நன்றாகத் தூக்கம் வரும் என்பதற்காகச் சிலர், இருமல் இல்லாதபோதே மருந்து குடிப்பார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற நேரங்களில் இருமல் மருந்து களைக் குடிக்கும்போது, அது சாதாரணமாக உடலில் இருந்து வெளியேறும் சளியைக்கூட வெளியேற விடாது. இதனால் உடலில் அளவுக்கதிகமாகச் சளி தங்கி எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம். மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்களுக்குச் சளி வெளியேறும் ஆற்றல் குறைந்து போயிருக்கும். இதனால் சளி உடலில் தங்கி எப்போதும் இருமல் இருக்கும்.
இருமலின்போது தவிர்க்க வேண்டியவை என்னென்ன?
* ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீமைத் தவிர்க்க வேண்டும்.
* லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணக் கூடாது. அது இருமலை அதிகப்படுத்தும்.
* நேரடியாக ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து எதையும் உண்ணக் கூடாது.
* பழைய தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.


இருமலை நிறுத்த வீட்டுச் சிகிச்சைகள் உதவுமா?
மிளகு மற்றும் கற்பூரவல்லிக்கு இருமல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மிளகு மற்றும் சீரகத்தை இடித்துத் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கலாம்.
கற்பூரவல்லி இலையுடன் துளசி சேர்த்துத் தண்ணீரில் நன்றாகக் கொதிக் கவைத்து வடிகட்டிக் குடிக்கலாம். இருமல் ஏற்படும் நேரத்தில் நம்மைத் தற்காத்துக்கொள்ள மட்டுமே இது பயன்படும். அதிகமாக இருமல் ஏற்பட்டால், சிறிது வெந்நீர் குடித்தால் தற்காலிகமாகச் சரியாகும்.
கடைகளில் விற்கப்படும் இருமலை நிறுத்தும் சாக்லேட்களால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. கடைகளில் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இருமல் மருந்துகள் சிறிது நேரத்துக்கு மட்டுமே இருமலைத் தடுத்து நிறுத்தும்.  இரண்டு வாரத்துக்கு மேல் இருமல் தொடர்ந்தால் ஆஸ்துமா, காசநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஆஸ்துமா நோயால் வரும் இருமலை மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியாது. அதற்கான மாத்திரை களுடன்கூடிய இன்ஹேலர்தான் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமாக இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு வாங்கும் இருமல் மருந்தை மற்றொருவர் பயன் படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் இருமல் ஏற்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். வயதுக்கேற்ப வெவ்வேறு மருந்துகள் இருக்கின்றன. எனவே, மருத்துவரின் அறிவுரைப்படி இருமல் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: