Advertisements

ஆஸ்துமாவை விரட்டும் எருக்கன் இலை!

ந்தியாவில் பரவலாகக் காணப்படும் செடி வகை எருக்கு அல்லது எருக்கன்… இந்த மூலிகை தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்குகள் உள்ளன.

பிள்ளையாருக்குப் பூஜை செய்ய பயன்படுத்தப்படும் மலர்களுள்

எருக்கம்பூவும் ஒன்று. எருக்கின் இலை, பட்டை, வேர், பூ, பால் என அனைத்தும் மருத்துவத்தன்மை மிக்கவை. ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய்க்கும் எருக்கன் சிறந்த மருந்து. எருக்கம்பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரை பங்கு சேர்த்து அரைத்து மிளகு அளவிலான சிறிய உருண்டைகளாக்கி உலரவைக்க வேண்டும். ஒரு வேளைக்கு ஒன்று என்ற அடிப்படையில் தினமும் இரண்டு வேளை 48 நாள்கள் தேனில் கரைத்துச் சாப்பிட்டுவந்தால், இரைப்பு நோய் (ஆஸ்துமா) குணமாகும். எருக்கன் இலைகளைத் தீயில் எரித்து அதன் புகையை வாய்வழியாகச் சுவாசித்தால், மார்புச்சளி வெளியேறுவதுடன் ஆஸ்துமா, இருமல் போன்றவை கட்டுப்படும்.

சில நேரங்களில் காலில் குத்தும் முள் உடைந்து உள்ளே தங்கிவிடும்.  அந்த இடத்தில் எருக்கம்பாலைத் தடவுவார்கள். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் சீக்கிரம் பழுத்து, ​சீழ் வெளியே வரும். கூடவே முள்ளும் வெளியே வந்துவிடும். நாள்பட்ட புண்களின்மீது உலர்த்திப் பொடியாக்கிய எருக்கு இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்துத் தடவினால், புண் சீக்கிரம் குணமாகும். குளவி, தேனீ, தேள் போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், கடிபட்ட இடத்தில் எருக்கம் பாலைத் தடவினால் விஷம் இறங்கும்.
பல் நோய், ஈறு வீக்கம், பல் சொத்தை குணமாக எருக்கம் பாலை ஒரு குச்சியால் தொட்டு, பிரச்னை உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். மூட்டுவலி, இடுப்புவலி, இடுப்புப்பிடிப்பு உள்ளவர்கள் எருக்கன் இலைகளை ஒன்றாகச் சேர்த்து மொத்தமாகக் கட்டி, அதை காய்ச்சிய விளக்கெண்ணெயில் நனைத்து பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். வாதக் கோளாறுகள் உள்ளவர்களும் இதே முறையைப் பின்பற்றிப் பலனடையலாம்.

Advertisements
%d bloggers like this: