Advertisements

குறைந்தாலும், கூடினாலும் சிக்கல்: தந்தையாக வேண்டுமென்றால் 7 மணி நேர தூக்கம் வேண்டும்

குழந்ைத பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன. இதனால், ஐவிஎப் என்ற செயற்கை கருவூட்டல் முறையை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘‘மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மேலும், விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து

வருகிறது. இவை, அவர்கள் தந்தையாகும் தகுதியை குறைக்கிறது’’ என்கிறார் டென்மார்க்கில் உள்ள கோபன்ெஹகன் பேராசிரியர் நீல்ஸ் ஷாகிபேக். இதற்கு முக்கிய காரணம், உணவுப் பொருட்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவை ஆண்களின் ஹார்மோன்களை பாதித்து, மரபியலிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அதுவும், இப்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு  பூச்சிக்கொல்லிகள் போன்ற ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பின் சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், விந்தணுவில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்வதில் ஆண்களின் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது என தூக்கம் பற்றி ஆராய்ச்சி இதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது. சீனாவின் சாங்கிங் மாநிலத்தில் உள்ள 3வது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 796 ஆண்களிடமிருந்து விந்தணுக்கள் பெறப்பட்டன. அவர்களிடம் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்ற விவரமும் கேட்டு பெறப்பட்டன.
அதில், 9 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்குபவர்களின் விந்தணுக்களில் டிஎன்ஏ.வின் தரம் 40 சதவீதம் குறைவாக இருந்தது. ஆறரை மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்களில் டிஎன்ஏவின் தரம் 30 சதவீதம் குறைவாக இருந்தது. குறைவான நேரம் தூங்குபவர்களுக்கும், அதிக நேரம் தூங்குபவர்களுக்கும் இனப் பெருக்கத்தை தூண்டும் டெஸ்டாஸ்டிரோன் ஹார்மோன் அதிகம் உருவாவதில்லை என்பது இதற்கு முந்தைய ஆய்வுகளிலும் கூறப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி முதல் ஏழரை மணி நேரம் தூங்குபவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. எனவே, தந்தையாக விரும்புபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.

Advertisements
%d bloggers like this: