புரோமலைன்

புரோமலைன் எனும் இயற்கை என்ஸைம் (என்ஸைம் என்பது நமது உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும் வேதிப்பொருள்) நமது உடலில் புரதச்சத்தை ஜீரணிக்கப் பெரிதும் உதவுகிறது.

புரோமலைன் குறைவால் வரும் பிரச்னைகள்


* இந்த என்ஸைம் குறைபாட்டால் புரதச்சத்து சரியாக ஜீரணமாவதில்லை.
* புண் மற்றும் வலி சரியாவதற்குத் தாமதமாகும்.
* அடிக்கடி ஒவ்வாமை, ஆஸ்துமா பிரச்னை தோன்றும்.
எதற்கு புரோமலைன் பயன்படுகிறது?
* அன்னாசிப்பழம் மற்றும் தண்டுகளில் கிடைக்கும் இந்த என்ஸைம், நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
* சைனஸ் அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு குணப்படுத்தப் பயன்படுகிறது.
* உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.
* உடல் பருமனைக் குறைக்கப் பயன்படுகிறது.
* அஜீரணத்தை சீராக்குகிறது.
* புரதச்சத்தை முழுமையாக உறிஞ்சுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* ஆஸ்துமா, ஒவ்வாமை,  ஆட்டோ இம்யூன் டிஸார்டர் நோய்களையும் குணப்படுத்தப் பயன்படுகிறது.
* கேன்சர், வயிற்றுப்புண், மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

எதில் புரோமலைன்?
* அன்னாசிப்பழம்
* பப்பாளி, மாம்பழம்
* தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus)
* முளைகட்டிய தானியங்கள்
* கிவி
* திராட்சை
* அவகேடோ
* தேன்
* ஆலிவ் எண்ணெய்
* தேங்காய் எண்ணெய்
ஒரு நாளைக்கு எவ்வளவு புரோமலைன்?
200 முதல் 800 மி.கி.
சிலருக்கு மருந்தாகத் தரும்போது வயிற்றுவலி ஏற்படும். எனவே, உணவின் இடையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

%d bloggers like this: