ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதில் இவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது!

மத்திய அரசு மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காகச் சில புதிய சேவைகளையும் டெலிகாம் நிறுவனங்களை அறிமுகம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. இப்படிப் பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ

 

என்ஆர்ஐ-கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் பயன்படுத்த கூடிய சரிபார்ப்பு முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்ய் உள்ளது.

ஒரு முறை கடவுச்சொல்

மத்திய அரசு மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க இணையதளம் மூலமாக ஒரு முறை கடவுச்சொல்லினை பயன்படுத்திச் சரிபார்க்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் செயலி மூலமாக மற்றும் குரல் அழைப்புகள் மூலமாகச் சரிபார்க்கும் சேவையினை அறிமுகம் செய்துள்ளதாக டெலிகாம் துறை செயலாளர் அருணா சவுந்தராஜன் தெரிவித்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள்

ஆதார் கார்டில் பதிவு செய்யாத மொபைல் எண்ணை ஒரு முறை கடவுச் சொல் மூலமாகச் சரிபார்த்து இணைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை வைத்து ஆதார் எண்ணுடன் கூடுதல் மொபைல் எண்ணை இணைக்கலாம் மற்றும் சரிபார்க்கலாம்.

வீட்டில் இருந்தபடி சரிபார்த்தல்

மூத்த குடிமக்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள் டெலிகாம் சேவை வழங்குனரிடம் கோரிக்கை வைத்தால் நேரடியாக அவர்களில் வீடுகளுக்கு வந்து ஆதார் சரிபார்ப்பினை செய்துகொள்வார்கள்.

ஏன் இந்த முடிவு?

சில டெலிகாம் நிறுவனங்கள் சர்வர் இணைப்பு வேகம் குறைவாக இருக்கின்றது என்று கூறி ஒன்றுக்கு மேற்பட்ட முறை பின்னர் வரவும் என்று கூறுகின்றனர் என்று எழுந்த புகாரினை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு

ஏற்கனவே என்ஆர்ஐ-களுக்குப் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: