ஆப்ஸ் அறிமுகம்! – செல்லங்கள் நலமா?

நாய்களும் பூனைகளும் நமக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவை. அதனாலே பல நேரம் அவை காயங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றிற்கும் முதலுதவி அவசியம்தான். ஆனால், எப்படிச் செய்வது என்பதுதான் நமக்குத் தெரியாது. அதற்கு உதவும் ஆப்தான் இது.

விரிவான வழிமுறைகள், இன்ட்ராக்டிவான தகவல்கள், வீடியோக்கள் என அத்தனை மீடியம் மூலமும் நமக்கு முதலுதவியைப் பற்றி எடுத்துச் சொல்கிறது இந்த ஆப். சந்தேகங்களையும் பிராணிகளின் படங்களையும் நண்பர்களுடனும் பகிர இந்த ஆப் மூலம் முடியும். அவசரகாலத்தில் எளிமையாகப் புரிந்துகொண்டு செயல்பட முடியும் என்பதால் இந்த ஆப்புக்கு 4.4/5 ரேட்டிங் தந்திருக்கிறார்கள் இதனைப் பயன்படுத்தியவர்கள்.
ப்ளே ஸ்டோர் லிங்க்: http://bit.ly/1UO6D6T


மக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதை மற்றவர்களிடம் சொல்வோம். நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் என்ன செய்யும்? அவற்றின் நலனுக்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும்? அதற்கு வழிகாட்டுகிறது  இந்த மொபைல் ஆப்.

நாயோ, பூனையோ… அதற்கு ஓர் என்ட்ரியை இந்த அப்ளிகேஷனில் போட்டுவிட்டால் அதன் மொத்த மெடிக்கல் ஹிஸ்டரியையும் சேமித்து வைத்துக்கொள்கிறது. அடுத்தமுறை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போது அந்த ஆப் தரும் தகவல்களை மருத்துவரிடம் காட்டினால் போதும். செல்லப்பிராணிகள் வழக்கமாக இல்லாமல், அவற்றிடம்  ஏதேனும் வித்தியாசமாக உணர்ந்தால் அந்தக் குறிப்புகளையும் இதில் சேமித்து விடலாம். குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் லாக் இன் உண்டு என்பதால், யார் வேண்டுமானாலும் தகவல்களைச் சேர்க்கலாம்; பார்க்கலாம். வெளிநாட்டில் நேரிடையாக மருத்துவர்களை அந்த ஆப் மூலம் கனெக்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
ப்ளே ஸ்டோர் லிங்க்: http://bit.ly/1C3hM6b

%d bloggers like this: