Advertisements

Daily Archives: நவம்பர் 1st, 2017

உறவில் உங்களை அறியாமல் நீங்க செய்யும் தவறுகள்… என்றாவது இதை உணர்ந்ததுண்டா..?

உணவில் ஆரோக்கியம் என்று நம்மை அறியாமல் சில தவறுகள் செய்வோம், அது விஷதன்மையாக மாறும். அதே போல தான் நமது உறவிலும் நாம் ஆரோக்கியம் என்று செய்யும் சில விஷயங்கள் பின்னாளில் விஷத்தன்மையாக மாறலாம். சில சமயங்களில் உண்மை கசக்கும் எனில் அதை மறைக்கவும் தெரிய வேண்டும். சில சமயங்களில் அந்த கசப்பை அன்றே உட்கொண்டு, தீர்வை கொண்டு, இல்வாழ்க்கை பயணத்தை தொடரவும் தெரிந்திருக்க வேண்டும்.

Continue reading →

Advertisements

எடப்பாடியைக் கைகழுவுகிறாரா மோடி?

ழையில் நனைந்து, தண்ணீர் சொட்டச் சொட்ட வந்த கழுகாரிடம்,
“பி.ஜே.பி-யின் நிறம் லேசாக மாறுவதுபோல் தெரிகிறதே?” என கேள்வியைப் போட்டோம்.
ரெயின்கோட்டைக் கழற்றியபடி பதில்சொல்ல ஆரம்பித்தார், கழுகார். “டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக அரசுக்குக் காட்டிவந்த தன் நிறத்தை இப்போது மாற்றிவிட்டது என்றும், எடப்பாடியைக் கைகழுவ மோடி தயாராகி விட்டார் என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன.

Continue reading →

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

நாம் உண்ணும் உணவு தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதே நோயற்ற வாழ்வுக்கு முதன்மையானது. கலப்படப் பொருள்களை உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குக்கூட ஆளாகலாம். அதனால், நாம் உண்ணும் உணவிலுள்ள கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.

டீத்தூள்

Continue reading →

மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு இடமாவது வாங்கி ஒரு  வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருக்கிறது. ஆனால், மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.  மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே ‘செக்-லிஸ்ட்’-ஆகத் தந்திருக்கிறோம். 

Continue reading →

பருமனானவர்களின் பார்வைக்கு

ல்லியாக இருப்பவர்களைப்போல குண்டாக இருப்பவர்கள் வேகமாகச் செயல்பட முடியாது. எந்த வேலையையும்  மலைபோல உணர்வார்கள். விரைவில் சலிப்படைந்து விடுவார்கள். மூட்டு வலி, இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். அவர்களது எடை  கூடக் காரணம் என்ன என்று மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும்.  உணவிலும்  வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்.

Continue reading →