Advertisements

Daily Archives: நவம்பர் 3rd, 2017

கரும்புள்ளியைப் போக்க இத ட்ரைப் பண்ணிப்பாருங்க!

நாம் என்ன செய்ததால் இந்த விளைவு என்று யோசிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் அடுத்தடுத்து சருமத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் தோன்றிடும். இப்படி சருமத்தின் நிறம் மாறுவதால், அல்லது முகத்தில் பருக்கள் தோன்றுவதால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

Continue reading →

Advertisements

தானியங்களின் அன்னை – கீன்வா

லகின் மிகப் பிரபலமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்று, கீன்வா (Quinoa). `Quinoa’ என்ற சொல்லை, `கீன்வா’ என்று உச்சரிப்பதுதான் சரி. இது ‘தானியங்களின் அன்னை’ என அழைக்கப்படுகிறது.
குளூட்டன் (Gluten) அலர்ஜியை ஏற்படுத்தும் புரதம் இல்லாதது இதன் தனிச்சிறப்பு. நமது உடலுக்கு அவசியமாகத் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் இருக்கின்றன. அத்துடன் இது, நார்ச்சத்து, மக்னீசியம், பி வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் இ மற்றும் பல பயனுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் அதிகமாகக்கொண்டிருக்கிறது.

Continue reading →

உற்சாகமாகச் செய்யலாம் உடற்பயிற்சி – நம்பிக்கை vs உண்மை

ரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய  உடற்பயிற்சி அவசியமாகிறது. உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள்

Continue reading →

இயற்கை உணவுக்கு திரும்புவது எப்படி?

இயற்கை முறை உணவுக்கு திரும்புவது எப்படி, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை

Continue reading →

கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்!

சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம். பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள்,  சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறுவர். நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள்.  

நர்மதை நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சிசெய்து வந்தவன் வாணாசுரன். சிறந்த சிவபக்தன். அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்றால், அவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்கும்?!
திருஅஞ்சைக்களம் தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பியது இவனைத்தான். இதை, ‘வரமலி வாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள’ எனும் நொடித்தான் மலை பதிகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.
இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில் விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில்விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை.
நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பல கோடி நன்மைகளைப் பெற்றுத் தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீய சக்திகளும் அண்டவே அண்டாது.
பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.