Advertisements

Daily Archives: நவம்பர் 4th, 2017

ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! – அரசியல் அம்பு!

தொப்பலாக நனைந்துவந்தார் கழுகார். ‘‘மக்களுக்கு மழை பற்றிய பயத்தைவிட மின்சாரம் குறித்த பயம்தான் அதிகம்” என வருத்தமான குரலில் பேசத் தொடங்கினார்.
‘‘சென்னை கொடுங்கையூரில் இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.  ‘சென்னை தெருக்களில் உள்ள பழுதடைந்த மின் பெட்டிகளைச் சரிசெய்ய வேண்டும்’ என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்கிறார்கள் மின் ஊழியர்கள். சென்னையில் பெரும்பாலும் மின்சார இரும்புப் பெட்டிகள்தான். பல இடங்களில் உடைந்துகிடக்கும் இரும்புப் பெட்டிகளை, மாற்ற வேண்டும் அல்லது வெல்டிங் செய்ய வேண்டும். இதற்கு, மழை சீஸன் ஒத்துவராது. கதவுகள் இல்லாததால் மின் பெட்டிகள் பெரும்பாலும் திறந்தபடியே கிடக்கின்றன.

Continue reading →

Advertisements

இறுக்கமான ஷூ அணியலாமா?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கல்வியறிவு, நவநாகரிகம் காரணமாக, ஷூ அணிவோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அதுவும், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில், ஷூ அணிவது கட்டாயம் என்ற நிலை வேறு வந்து விட்டது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷூ, அதை தொடர்ந்து அணிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Continue reading →

இதுதான் உலகின் முதல் புரூட் ஜாம், உலகம் வியக்கும் தென்பழனியின் அமிர்த கலவை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

இன்றைய உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்ல போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தம், இதனை வெறும் பூஜைப் பொருளாகப் பார்ப்பது முறையா?

வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல்,தைராய்டு என பல உடல் சிக்கல்களைக் தோற்றுவிக்க அடிப்படைக் காரணம்.

Continue reading →

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..!

ஆண்களுக்கு இணையாக, பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. வீட்டை கவனிப்பதோடு, அலுவலகத்திலும் உள்ள பிரச்னைகளால் சாதாரண பெண்களே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:

Continue reading →

சத்து இருந்தால் உதிராது முடி

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்கு காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று, நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் பல உணவுகளில், போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.
பிற நோய் தொற்றுகள் ஏற்பட்டாலும், முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே, தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன? என்பதை கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

Continue reading →

மழைக்காலத்தில் ஒருவருக்கு மின் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, கூடாதவை!

சென்னைக் கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் இரண்டு நாள்களுக்கு முன்பாக மின்சாரம் கசிந்து, மழைநீரில் நின்றுகொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்னும் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் அநியாயமாகப் பறிபோனது. மழைநேரங்களில் திடீரென மின்சாரக் கசிவு ஏற்படுவது தமிழ்நாட்டில் இயல்பான ஒன்றாகிவிட்டது . ஆனால், “அந்த இணைப்புப் பெட்டியில் மின்சாரக் கசிவு இருப்பதாகப் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அநியாயமாக இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய்விட்டது” என்று கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல… இதுபோன்ற மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசால், என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன… மக்களிடம் எந்த மாதிரியான விழிப்புஉணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும்… அந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது?… விரிவாகப் பார்ப்போம்.

Continue reading →