Advertisements

நீங்களும் அழகாய் மாறலாம்!

இறைவனது படைப்பில் அழகற்றதென எதுவுமே இல்லை. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமான எழில் தோற்றத்தை அமைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நானும் அழகே என நிமிர்ந்து நில்லுங்கள். தன்னம்பிக்கைதான் மனிதர்களின் முதல் அழகு.
நான் நிச்சயம் அழகாக இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களிடம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தன்னம்பிக்கை உங்களை விட்டு அகலாதவரை, உங்கள் அழகுக்கு குறைவேதும் ஏற்பாடாது.

உங்களுடைய அழகைப் பற்றி மறந்துகூட பிறருடைய அபிப்பிராயத்தை குறிப்பாக பெண்களின் கருத்தை வாய்விட்டு கேட்காதீர்கள். அந்த வினாவுக்குக் கிடைக்கக் கூடிய பதில் சில சமயம் உங்கள் மனத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடும். பலவீனமான மனம் அழகு இயல்பை நிலைகுலைய செய்துவிடும்.
அகன்ற கண்கள் சில பெண்களுக்குதான் அழகாக இருக்கும், குறுகிய உள்ளடங்கிய கண்கள்தான் சிலருக்கு அழகு சேர்க்கும், சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும். உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை.
ஆனால் குள்ளமான பெண்களில் அழகிகள் கிடையாதா! உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.
கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி. அப்படிபட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதனாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம். இனிய குரல் அழகின் ஓர் அம்சம். உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கும்.
உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதைச் செம்மைபடுத்த முயலுங்கள்.
முறையான இசைப்பயிற்சியால் உங்கள் குரலில் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச் செய்துவிடும். உங்கள் உடலின் நிறம் சிவப்பாக இருப்பதே மட்டுமே அழகு என்றென்ன வேண்டாம். கறுப்பான உடல் நிறத்திற்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கறுப்பு நிறம் என்பதற்காக எந்த பெண்ணும் கலக்கமடைய
தேவையில்லை.
புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கிவிடும். நல்ல குணம், அனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு
உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்கு புற அழகு சமானமே ஆகாது. புற அழகை விட அக அழகே உயர்ந்து நிற்கும்.
காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.
செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.
வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும். இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

Advertisements
%d bloggers like this: