Advertisements

கிச்சடி ஏன் இன்டர்னேஷனல் லெவல்ல போட்டிக்கு போகுது தெரியுமா? இதாங்க ரகசியம்!!

கிச்சடியை பார்த்தாலே அலறி அடித்து ஒதுங்குபவர்கள் கொஞ்சம் நஞ்சமில்லை நம்ம ஊரில். ஆனால் இதை தேசிய உணவாக ஆக்கியதும் ஜெர்க் ஆனது என்னவோ உண்மைதான்.

ஆகாதவர்கள் கைப் பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது போல் இப்போது எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு வராமலிருந்தால்தான் ஆச்சரியமே. கிச்சடியை தேசிய உணவாக்கியதற்கு பிண்ணனி மிகவும் எளிமையானதாகத்தான் இருக்க வேண்டும். காரணம் அதன் சத்துக்கள்.

கிச்சடி செய்வதற்கான நேரம் குறைவு. அதுவும் சம்பா ரவையில் கிச்சடி செய்வது ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியம், நேரமும் குறைவு. அதனுடன் தொட்டுக் கொள்ள தயிர், ஊறுகாய் அல்லது சட்னி தொட்டு சாப்பிட்டால் அது தேவாமிர்தம்தான். ஆனால் ஏன் பலபேருக்கு கிச்சடி என்றால் தூரம் விழுகிறார்கள் என்றால் அது வீட்டில் அடிக்கடி செய்வதால் கூட இருக்கலாம்.

ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் நெடு நாள் வாழ்பவர்களிடம் ஆராய்ச்சி செய்த போது இட்லி, தோசை, கிச்சடி என எளிமையான ஒரே வகையான உணவுகளை திரும்ப திரும்ப எடுத்துக் கொள்வதால் அவர்களின் ஆயுள் கூடுகிறது. வயிற்று உறுப்புகள் பாதுகாப்பாக உணர்கிறது என தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fboldskytamil&width=79&layout=button_count&action=like&size=small&show_faces=true&share=false&height=21&appId
நன்மை:

கொஞ்சமாக இதைச் சாப்பிட்டாலும் முழு நிறைவு உண்டாகும்; நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்; மெதுவாகத்தான் செரிமானம் ஆகும் என்பதால், அதிகமாக உணவு உட்கொள்ளவேண்டியிருக்காது. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கும், இருக்கும் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் சிறந்தது. இது ஆற்றலைத் தரக்கூடிய சிற்றுண்டி.

சக்தி அளிக்கும் :

காலையில் ஒருவர் உப்புமா சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதற்குமான சக்தி இதிலிருந்து கிடைத்துவிடும்; பொதுவாக, மதிய நேரத்துக்குப் பிறகு சிலருக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, மந்தத் தன்மையையும் போக்கும். இதைத் தயாரிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிப்பது கூடுதல் சக்தியை அளிக்கும்.

குடலுக்கு ஆரோக்கியம் :

ஜீரணத்தை எளிமையாக்குவதால் குழந்தைகளுக்கும் கிச்சடியை தரலாம். இவை குடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. உடல் நலமில்லாதவர்கள் குறைவான எண்ணெயில் கிச்சடியை சாப்பிடுவதால் உடலுக்கு சக்தியை பெறலாம்.

சத்துக்கள்

ஒரு கப் அளவுகிச்சடியில் கலோரிகள், கொழுப்பு , கார்போஹைட்ரே, புரோட்டீன், சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன. அரிசி, கோதுமை, சேமியா என விதவிதமான வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் ரவையில்தான் செய்யபப்டுகிறது. அவற்றுடன் காய்கறிகளை சேர்ப்பதால் அனைத்து வித சத்துக்களும் நிரம்பி நமக்கு ஊட்டத்தை அளிக்கிறது.

தோஷ சம நிலை :

வாயு, பித்தம், கபம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்ய சமனிலை செய்வதால் அஜீரணக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், போன்றவை வராமல் காக்கும்.

நச்சுக்களை அகற்றும் :

உணவே நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றதென்றால் அது கிச்சடிதான். உடலில் சேரும் ரசாயனங்கள், நச்சுக்கள், கழிவுகளை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.

அலர்ஜி வராது :

சிலருக்கு கோதுமையில் இருக்கும் க்ளுடன் அலர்ஜி உண்டாகும். அதனால் சப்பாத்தி சாப்பிட முடியாது. அவர்களுக்கு எல்லாம் கிச்சடி வரப் பிரசாதம்தான். அவர்கள் தாரளமாக கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு பாதகம் வராது.

கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?

சிலர் கர்ப்பமாக இருக்கும்போது அது வேண்டாம், இது வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் கிச்சடியை அப்படி ஒதுக்கி வைக்கத் தேவையில்லை. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.

கிச்சடி ஃபாஸ்டிங்க் :

நச்சுக்களை வெளியேற்ற சிலர் வாரம் அல்லது மாதம் ஒருமுறை விரதம் மேற்கொள்வார்கள். விரதம் இருக்கும் சமயத்தில் உங்களின் ரத்தத்தில் குளுகோஸ் அளவு தடுமாறும். ஏற்ற இறக்கங்களுடன் குளுகோஸ் இருக்கும் போது சிலருக்கு மயக்கம் உண்டாகலாம்.

வெறும் பட்டினியாக இருப்பதர்கு பதிலாக நச்சுக்களை வெளியேற்ற கிச்சடி யை மட்டும் சாப்பிடலாம். இதனால் என்ன நன்மை கிடைக்கும் என்ரால் உங்கள் ரத்தத்தில் குளுகோஸ் அளவு நிலையாக இருக்கும். நச்சுக்களையும் வெளியேற்றும்.

கிச்சடி ஃபாஸ்டிங்க் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

உடலில் கொழுப்புக்களை உடைக்க உதவுகிறது.

இது உடலிலுள்ல நோய்களை மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.

குடல் மற்றும் கல்லீரலில் இருக்கும் வேண்டாத கழிவுகளை வெளியேற்றி இவற்றை புத்துணர்வாக்குகிறது. 

பக்கவிளைவுகள் :

கிச்சடி மிக எளிமையாக தயாரிக்கப்படுவதால், எந்த வித வயிற்றுக் கோளாறுகளோ, அல்லது பக்கவிளைவுகளோ உண்டாகாது என கூறப்படுகிறது

Advertisements
%d bloggers like this: