Advertisements

Daily Archives: நவம்பர் 16th, 2017

எடப்பாடியும் பன்னீரும் என் பினாமிகள்தான்!” – தினகரன் ‘தில்’ பேட்டி

ங்களின் உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, ஒன்றும் இல்லாதவர்களைப் பிடித்து ரெய்டு நடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ எனச் சிரித்தபடியே சீறுகிறார் டி.டி.வி.தினகரன். மொத்தக் குடும்பமும் ரெய்டில் சிக்கிய நிலையில், தைரியமாக வெளியில் வந்து பேசிய தினகரன், ‘தில்’கரனாக தன்னை நிரூபித்தார். தினகரனை மட்டும் விட்டுவிட்டு, அவரைச் சுற்றிலும் இருப்பவர்களைச் சீண்டியது ரெய்டு வியூகம். தினகரனைப் பயமுறுத்தும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறார்கள். 1,850 அதிகாரிகள் 187 இடங்களில் ரெய்டு நடத்திக்கொண்டிருந்தபோது, கோ பூஜையில் ஈடுபட்டிருந்தார் தினகரன். ரெய்டு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க… இன்னொரு பக்கம் கூலாக கோயில்களுக்குச் சென்று திரும்பிய தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்தோம். புன்னகையுடன் இயல்பாகப் பேசினார்….

‘‘இந்த ரெய்டை எதிர்பார்த்தீர்களா?’’

Continue reading →

Advertisements

பினாமி சட்டம்… சஃபேமா… ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி!

ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம்.

‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லி பி.ஜே.பி-யிடம் புலம்பிய புலம்பல்களை அடுத்தே இந்த ரெய்டுகள் வேகம்பிடித்தன.’’

‘‘என்ன புலம்பினார்களாம்?’’

Continue reading →

இயற்கையில் கிடைக்கும் கோவை இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால்  ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.

Continue reading →

குறையொன்றும் இல்லை – உலக குறைப்பிரசவ விழிப்பு உணர்வு தினம் நவம்பர் 17

ன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் குறைப்பிரசவ (Preterm labour) நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. என்றாலும், குறைப்பிரசவம் நேர வாய்ப்புள்ள பெண்களை அவர்களின் கர்ப்பக்காலத்திலேயே கவனித்து முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைத் தொடங்குவது முதல், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை நவீன மருத்துவ உபகரணங்கள்கொண்டு காப்பாற்றி அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொடுப்பதுவரை, இதில் அச்சம்கொள்ள வைக்கும் காரணிகள் இன்று விலக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ்.

எது குறைப்பிரசவம்?

Continue reading →