Advertisements

ஸ்லிம்’ஆக்கும் குடம் புளி!

குடம் புளி… கோக்கம் புளி, மலபார் புளி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் புளியை, இலங்கையில் ‘சீமை கொறுக்காய்’ என்பார்கள். இந்தோனேசியாவைத் தாயகமாகக்கொண்ட இந்தப் புளியின் தாவரவியல் பெயர் Garcinia gummi-gutta.

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியைவிட அதிக மருத்துவக் குணம் நிறைந்த இந்தப் புளி, பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் விளையக்கூடியது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் இந்தப் புளியை, கேரள மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இது சமையலுக்குச் சுவை கூட்டுவதுடன் செரிமானத்துக்கும் துணைபுரியும். 
இயற்கையான முறையில் விளையும் இந்தப் புளியைச் சாம்பார், காரக் குழம்பு, ரசம் எனத் தினசரிச் சமை யலுக்குப் பயன்படுத்தலாம். ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். வெல்லத்துடன் கலந்து பானகம் செய்தும் பரிமாறலாம்.
குடம் புளியின் உள்ளே இருக்கும் சதையுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தும் அருந்தலாம்.
எடை குறைக்க விரும்புபவர்கள் இந்தக் குடம் புளியைத் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் மெலிவதற்காகத் தயாரிக்கப்படும் பல மருந்துகளில் முக்கிய இடம் வகிப்பது இந்தக் குடம் புளிதான். எடை குறைப்புக்காக உதவும் மருந்துகள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், குடம் புளி நிறைவான பலன்களைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து  எழிலான தோற்றத்தைத் தரும். உடல் தசைகளை வலுவாக்கக்கூடியது. நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.
குடம் புளியின் தோலிலிருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகப் பயன்படுகிறது.

Advertisements
%d bloggers like this: