இயற்கை மருத்துவத்தில் பயன்படும் திரிபலாவின் மருத்துவ பயன்கள்

உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றமானது, உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. குடல்களை சுத்தப்படுத்தி உடலை இளைக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. ஜீரண மண்டலத்தின் நலத்தை பாதுபாப்பது மிக முக்கியம்.

 

நல்ல செரிமான திறனை வளர்க்க மிக எளிய வழி என்னவென்றால், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் திரிபலா மூலிகையை நம் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது. திரிபலா என்பது நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையாகும். திரிபலாப் பொடியை இரவில் உட்கொண்டால் பலன் அதிகமாகக் கிடைக்கும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

* இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* உணவுப்பாதையில் நச்சுப் பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொரிட்களை நீக்கும் சிறாந்த மலமிளக்கியாகவும்  செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. மேலும் வயிற்றில் பூச்சி வளர்தல்  மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

* வயிற்றுப் புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த சோகையை சரி செய்கிறது. ரத்த  ஓட்டத்தைச் சீராக்குகிறது.

%d bloggers like this: