Happy New Year-2018
பசியில்லையா? பத்து விஷயங்களில் கவனம்!
அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதுபோன்ற சூழலில் மருத்துவரை
குழந்தை மனசு புதிரல்ல
சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள்
கை நடுக்கம், விரல்களால் எதையும் சரியாகப் பிடிக்க முடியாமலிருத்தல், மணிக்கட்டுப் பகுதியில் வலி… இந்தப் பிரச்னைகள் எல்லாம் முதியவர்களுக்கு வரலாம்; மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ஏற்படலாம். இப்போது மாணவ, மாணவியர்களும் அதிக அளவில் இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
கூகுள் டாக்டரை நம்பலாமா?
தலைவலியோ, மூட்டுவலியோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்கான சின்ன சமிக்ஞைகள் தெரிந்தாலோ இப்போதெல்லாம் நாம் என்ன செய்கிறோம்? கூகுளில் அந்த அறிகுறியைப் பற்றித் தேடிப் படிக்கிறோம். அது என்ன சொல்கிறதோ அதை உண்மை என
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்
ஒத்தடம்… இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்… என்று இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப்
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்
இதய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி கோத்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். நெஞ்சுச் சளியில் இருந்து விடுபடுவது எப்படி? அறிகுறிகள்,
அழகு என்பது ஆரோக்கியம்!
ஸ்கின் கேர்
`அழகு என்பது ஓர் ஆற்றல். புன்னகை என்பது ஓர் ஆயுதம்’ என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினாலே முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம். இதோ… நம் கிச்சன்
மனமே மருந்து!
ஒரு மருந்து ஆராய்ச்சியாளரோ, மருந்து நிறுவனமோ தமது புதிய மருந்தை, குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்குக் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை.
விடைபெறும் 2017: இணையத்தை வளைத்து தேடிய இந்தியர்கள்!
இணையதளத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்ட நிலையில், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் இணையத்தில் எதைத் தேடினார்கள் என்ற விஷயமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்தியர்கள் 2017-ல் அதிகம் தேடிய விவரங்கள் என்னென்ன?
சினிமா