Advertisements

சமைத்தால் நீங்கும் சங்கடம்

ரு நல்ல நாள்; ஆனால், உங்களுக்கு இல்லை.
காலையில் அலுவலகம் கிளம்பியதுமுதல் வீடு திரும்பும்வரை எல்லாமே நீங்கள் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக நடக்கிறது. பஸ் கண்டக்டர், பக்கத்து சீட்டு ஆள், கேன்டீன் இன்சார்ஜ், மேனேஜர் வரை உங்களை வாட்டி எடுக்கிறார்கள். உச்சக்கட்ட மன அழுத்தம். வீடு திரும்பியதும் என்ன செய்வீர்கள்?

சிலர் இசை கேட்பார்கள். சிலர் வீடியோகேம்ஸ் விளையாடுவார்கள். உடற்பயிற்சி, தூக்கம் தொடங்கி புகை, குடி வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் உண்டு.
‘சமையல் செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் சரியாகும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
மன அழுத்தத்துக்கு சமையல்கலை ஒரு முக்கியமான தீர்வு என்கிறார்கள் ஆய்வாளர்கள். அது மட்டுமல்ல; சமைப்பதற்கு கிரியேட்டிவிட்டியும் தியானத்துக்கு ஒப்பான மனநிலையும் தேவை என்கிறார்கள்.
இன்னும் சில மருத்துவர்கள், பதற்றம் மற்றும் உற்சாகமின்மை போன்ற பிரச்னைகளுக்குச் சமையலை சிகிச்சையாகவே அறிவுறுத்துகிறார்கள். அமெரிக்காவில் சில மருத்துவமனைகளில் சமையல் வகுப்பைத் தங்களது ட்ரீட்மென்ட்டின் ஒரு பகுதியாகவே வைத்திருக்கிறார்கள்.
‘‘சமையல் செய்யும்போது பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கின்றன. ஓர் இலக்கை வைத்து, அதை நோக்கி நகரச் செய்கிறது சமையல். இவை இரண்டும் பல மன வியாதிகளுக்குத் தீர்வாகின்றன” என்கிறார்கள் அந்த மருத்துவர்கள். சமைத்த உணவைச் சாப்பிட்டவர்கள் அவர்களைப் பாராட்டும்போது அந்தச் சிகிச்சையின் வீரியம் இன்னும் அதிகரிக்கும். பாராட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குவதுதானே மனித இயல்பு? அது கிடைக்காமல் போவதுதான் பல மனநோய்களின் முக்கியக் காரணி என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
‘‘சாப்பிடுவதன் மூலம் மட்டுமின்றி, சமைப்பதன் மூலமும் மனதையும் உடலையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கலினரி தெரபிஸ்ட் ஜூலியானா.
அடுத்த முறை யார் மீதாவது கோபமோ, வருத்தமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால்  உடனே கிச்சனுக்குள் நுழையுங்கள். மனதுக்குப் பிடித்த உணவைச் சமையுங்கள்.
ஆல் இஸ் வெல்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: