Advertisements

Daily Archives: திசெம்பர் 3rd, 2017

கடன் என்னும் கத்தி!

சேமிக்காமல் இருப்பது கூடப் பெரிய தவறில்லை. கடன் வாங்கினால், அதுவும் எக்கச்சக்க மாக வாங்கினால், நமக்கு நாமே சமாதி கட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குச் சரியான உதாரணம் பரசுராமன்.
அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபோது கணிசமான அளவில் அவரிடம் கையிருப்பு இருந்தது. அவரின் மகன் ரகு, தனியார் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான்.  ஓய்வுபெற்றதன் மூலம் கிடைத்த பணம், சேர்த்து வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் போட்டு ஒரு கிரவுண்டு வீட்டு மனையை வாங்கி, வீட்டுக் கடன் மூலம் 600 சதுர அடியில் வீட்டைக் கட்டினார். வீட்டிலிருந்தபடியே கார வகைகள், ஊறுகாய் தயாரித்துக் கடைகளுக்குச் சப்ளை செய்ய ஆரம்பித்தார். தொழில் சூடுபிடிக்கவே நல்ல வருமானம் வர ஆரம்பித்தது.  

Continue reading →

Advertisements

ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்

நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும். ஆனால் அதன் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் வேறுபடும். ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நகங்களை பாதுகாக்க வேண்டுமானால் நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தோலின் தன்மையை வைத்து நகங்களின் சிறப்பை அறியலாம். வீட்டிலேயே ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வளரச் செய்யும் யுக்திகளை இங்கு காணலாம்.

Continue reading →

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை…

நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற

Continue reading →

கொலாஜென் (Collagen)

கொலாஜென் என்பது,  நமது உடலில் தசைகள், எலும்பு, தோல், ரத்தக்குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் உள்ள ஒருவகைப் புரதம்.  இது எலும்பு, தோல் போன்றவற்றை இறுக்கமாகவும் சக்தியுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் மூட்டுகளுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது. ஆனால், நமக்கு வயதாகும்போது இந்தப் புரதத்தின் உற்பத்தி குறையும். அதனால்தான் வயதானவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், தசை தளர்ந்து போதல், மூட்டுகளில் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உண்ணுதல், புகைப்பிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களாலும் நமது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையும்.  

கொலாஜென் உற்பத்திக்கு  உதவும் உணவுப்பொருள்கள் 

Continue reading →