Advertisements

கடன் என்னும் கத்தி!

சேமிக்காமல் இருப்பது கூடப் பெரிய தவறில்லை. கடன் வாங்கினால், அதுவும் எக்கச்சக்க மாக வாங்கினால், நமக்கு நாமே சமாதி கட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குச் சரியான உதாரணம் பரசுராமன்.
அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபோது கணிசமான அளவில் அவரிடம் கையிருப்பு இருந்தது. அவரின் மகன் ரகு, தனியார் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான்.  ஓய்வுபெற்றதன் மூலம் கிடைத்த பணம், சேர்த்து வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் போட்டு ஒரு கிரவுண்டு வீட்டு மனையை வாங்கி, வீட்டுக் கடன் மூலம் 600 சதுர அடியில் வீட்டைக் கட்டினார். வீட்டிலிருந்தபடியே கார வகைகள், ஊறுகாய் தயாரித்துக் கடைகளுக்குச் சப்ளை செய்ய ஆரம்பித்தார். தொழில் சூடுபிடிக்கவே நல்ல வருமானம் வர ஆரம்பித்தது.  

ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில்  ரகுவின் நண்பன் வடிவில் கஷ்டம் வந்தது. ரகுவின் நண்பன்  ஹோட்டல் தொழிலில் தேர்ச்சி பெற்றவன். அவன் கொடுத்த ஐடியாவின்படி, ஹோட்டல்  ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான் ரகு.மகனின் பிசினஸ் ஆர்வத்தை பரசுராமன் தடுக்க வில்லை. தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தார். ஹோட்டல் ஜோராகச் செயல்படத் தொடங்கியது.
திடீரென ஒருநாள் ரகுவின் நண்பன் வெளி நாட்டுக்குப் போகவிருப்பதாகவும், பார்ட்னர்ஷிப் பிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சொன்னான். “அனுபவம் இல்லாமல் தொழிலைத் தனியாக உன்னால் சிறப்பாக நடத்த முடியாது. பேசாமல் ஹோட்டலை விற்றுவிடு’’ என்று பரசுராமன் சொன்னதை ரகு கேட்கவில்லை.
வேறுவழியில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி ஹோட்டலை ரகுவுக்கு சொந்தமாக்கிக் கொடுத்தார். ஹோட்டல் மொத்தமாக தன் பொறுப்பில் வந்ததும் ரகுவுக்கு, வெகுசீக்கிரத்தில் அம்பானி ஆகிவிட வேண்டும் என்ற ஆசை வரத்தொடங்கியது. அப்பாவை நச்சரித்து மீண்டும் பெரிய தொகையை வட்டிக்கு வாங்கி ஹோட்டலை அழகுபடுத்தினான். கேட்டரிங் சர்வீஸுக்கு வாகனங்களை வாங்கினான். பந்தாவுக்காகத் தனக்கென ஒரு கார் வாங்கினான். பணக்காரத் தோற்றம் வந்த அந்தச் சமயத்தில் ரகுவுக்குப் பெண் பார்த்துவந்தார் பரசுராமன். “வசதியான வீட்டிலிருந்து வரன் வருகிறது. ஆனால், உங்கள் வீடுதான் வசதி போதாது என்கிறார்கள்” எனத் தரகர் சொல்லவே, உடனே டாப் அப் லோன் போட்டு மேல்தளத்தில் விசாலமான வீட்டைக் கட்டினார் பரசுராமன். ஆடம்பரமாகத் திருமணமும் முடிந்தது.
ஆனால், அனுபவம், தொழில் நுணுக்கங்கள் தெரியாததால் ரகுவினால் ஹோட்டலைத் திறப்பட நிர்வகிக்க முடியவில்லை. ஹோட்டல் மூலம் போதிய வருமானம் கிடைக்காததால், கடனைச் சரியாகக் கட்ட முடிய வில்லை. வங்கி அதிகாரிகள் வீட்டு வாசலுக்கு வர ஆரம்பித்தார்கள். வட்டிக்குக் கடன் தந்தவர்கள் கூட்டமாக வந்து அசிங்கப்படுத் தினார்கள். இதனால், ரகுவுக்கும் அவனது மனைவிக்கும் பிரச்னை வந்து விவாகரத்தில் முடிந்தது. இதனால் விரக்தியான ரகு, ஹோட்டலை விற்று பாதிக் கடன் வரை அடைத்தான்.   வேறு வழியில்லாமல் பரசுராமன், பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும் விற்று மீதிக் கடனை அடைத்தார்.

பரசுராமன் என்ன செய்தி ருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும்..? இனி அவர் என்ன செய்ய வேண்டும்..?

நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி விளக்கமாக எடுத்துச் சொன்னார்…      

“கடன் வாங்குவதில்  தவறேயில்லை. வாங்கிய தொகையை எதற்காகப் பயன் படுத்துவது, எப்படிப் பயன் படுத்துவது எனத் தெரியாமல் கண்மூடித்தனமாகச் செலவு செய்வதுதான் பெரும்பாலான வர்களிடம் உள்ள பெரிய தவறு.
பரசுராமனைப் பொறுத்த வரை, அவருடைய பிரச்னை  இப்போது ஏற்பட்டதில்லை. அவர் ஓய்வுபெற்றதிலிருந்தே அவர் செய்த தவறுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம். ஓய்வுக்காலத்தில் கிடைத்த பணத்தைக்கொண்டு அவர் வீடு வாங்கியதே தவறு.
அனுபவம் இல்லாத தொழிலில் அடுத்தவர் தயவை நம்பி பிசினஸில் இறங்க மகன் ஆசைப்பட்டபோது, அவனு டைய பிசினஸ் பிளான்  பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் பிசினஸில் இறங்க அனுமதித்தது அடுத்த தவறு.
பிசினஸ் ஆரம்பித்த பிறகாவது, ஒரு பணியாளராக இருந்து ரகு தொழிலைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். முதலாளி மனோ பாவத்துடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்ளா தது தவறு. இத்தனை சிக்கல் இருக்க, மகனுக்கு பணக்கார இடத் தில் வரன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாடியில் இன்னொரு போர்ஷனைக் கடன் வாங்கிக் கட்டியது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்ததற்குச் சமம். 
இனி என்ன செய்யலாம்..? மீண்டும் ஜீரோவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ரகு நல்ல வேலையைத் தேடிக் கொள்வதுதான் இப் போதைக்கு ஒரே வழி.  சுருக்கமாகச் சொன்னால், கடன் ஒரு கத்தியைப் போன்றது. லாகவமாகப் பிடித்தால் நமக்கானவற்றைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம். எசகுபிசகாகப் பிடித்தால் கையைப் பதம்பார்த்துவிடும்.”
குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

கடன் வாங்கும் முன்..!
டன் வாங்கும்முன் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும், அடிப்படையான மூன்று விஷயங்களைக் கண்டிப்பாக கவனிப்பது அவசியம் என்கிறார் சுரேஷ் பார்த்தசாரதி. அவை என்னென்ன..?
* கடன் வாங்கியாக வேண்டும் என நீங்கள் முடிவு செய்தபிறகு, கடன் ஏன், எதற்கு வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பதுடன், கடனுக்கான  தேவை அதிமுக்கியமானதா என நூறு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
* கடன் வாங்கிவிட்ட பிறகு, அதைத் திரும்பக் கட்டும் தகுதி நமக்கு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வாங்கும் மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்குமேல் இ.எம்.ஐ செலுத்தும் வகை யில் கடன் வாங்கினால் சிக்கல்தான்.

*
மிகமிக அவசர காலத்தில் மட்டுமே அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டும். மிகமிக அவசரம் உள்ளதா, மிதமான அவசரம் உள்ளதா, கடனைத் தவிர்த் தாலும் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பது அவசியம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: