Advertisements

Daily Archives: திசெம்பர் 8th, 2017

கொஞ்சம் ப்ளஸ்… நிறைய லாபம்! – தென்னை தரும் பொருள்கள்!

திப்புக் கூட்டல் என்பது குறிப்பிட்ட சில பொருள்களுக்கு மட்டும் கிடையாது. விவசாயத்தில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களையும் மதிப்புக் கூட்ட முடியும். அதன்படி தென்னையை எடுத்துக்கொண்டால் தேங்காய், தென்னை மட்டை, இளநீர், தேங்காய் எண்ணெய் ஆகியவை கிடைக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இவை தவிர்த்து  தேங்காய் பவுடர், கயிறு, தென்னை நார்க்கட்டி, பதப்படுத்தப்பட்ட இளநீர், தென்னங் கருப்பட்டி எனப் பல வடிவங்களில்

Continue reading →

Advertisements

தொப்பி’ போனாலும் தினகரன் ‘அமோகம்’

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு, ‘தொப்பி’ கிடைக்காத நிலையில், அவரது ஆதரவு கும்பல், தெருவுக்கு தெரு, பணம் பட்டுவாடா செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

Continue reading →

உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்?

யர் ரத்த அழுத்தம், உலகை ஆட்கொள்ளத் துடிக்கும் உயிர்க்கொல்லி நோயாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மாரடைப்பு, பக்கவாதம், பார்வை பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகளே இல்லாமல், உயிரைப் பறிக்கக்கூடிய கொடியநோய். அதனால்தான், இதை ‘மெல்லக் கொல்லும் நோய்’ (Silent Killer) என்கிறார்கள்.

Continue reading →

பெட் பாட்டில் பயன்படுத்துகிறவரா நீங்கள்?!

தண்ணீரால் உடல்நலத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக மண்பானை, செம்பு பாத்திரம் போன்றவற்றில் தண்ணீரை ஊற்றி அன்றாட தேவைகளுக்கு உபயோகிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், வாழ்க்கை முறை மற்றும் கால மாற்றங்களால் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல பொருட்களையே பயன்படுத்தி

Continue reading →

அனுமன் தரிசனம் – வெற்றிலை மாலை… அணையா விளக்கில் நெய்… – திருமணம் கூடி வரும்!

சென்னை கிண்டி, எம்.கே.என். சாலையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரஆஞ்சநேயர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் அனுமன், ஸ்ரீமத்வரின் சீடர் பரம்பரையில் தோன்றிய ஸ்ரீவியாஸராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

கோயிலில் ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீநரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சமேத அழகிய மணவாளப்பெருமாள், ஸ்ரீராமாநுஜர் ஆகியோருடன் ராகு கேதுவும் காட்சி தருகின்றனர். திருமண யோகம் தரும் திருக்கல்யாணத் திருத்தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது. மேற்கு நோக்கியிருக்கும் மூலவர் தெற்கு நோக்கி நடப்பதுபோல் இருக்கிறார். அவரின் திருப்பாதங்களில் தண்டை, நூபூரம் அணிந்துள்ளார்.

அனுமனின் வலது திருக்கரம் அபயமுத்திரை தரித்துள்ளது; இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கரத்தில் சௌகந்திகா புஷ்பமும் திகழ்வது சிறப்பு. மேலும், மணிகட்டில் கங்கணமும் புஜத்தில் கேயூரமும், வலது புறமாக மேல் நோக்கிச் செல்லும் வாலின் நுனியில் அழகிய சிறிய மணியும் திகழ்வது மிக அற்புதம். மொத்தத்தில் இந்த ஆஞ்சநேயரை நாள்முழுவதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு; அவ்வளவு சாந்நித்தியம்.
அருள்மிகு வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஒன்பது வியாழக்கிழமைகள் தொடர்ந்து வெற்றிலை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, கோயிலில் இருக்கும் அணையா விளக்கில் நெய் சேர்த்து, ஒன்பது முறை கோயில் முழுவதும் வலம் வந்து வழிபட வேண்டும். ஒன்பதாவது வாரம் சுவாமிக்கு வடை மாலை சாத்தி, ஜாதகத்தை சுவாமி திருவடியில் வைத்துச் சமர்ப்பித்தால் உடனே திருமணம் கூடி வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அமாவாசை தினங்களில், இந்தக் கோயிலில் அருளும் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர 48 முறை வலம்வந்து, சுவாமி திருவடியில் தேங்காய் மற்றும் எலுமிச்சைப்பழம் வைத்து வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். அனுமத் ஜயந்தி, ஸ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள்  இங்கு நடைபெறுகின்றன.