கை வைக்குமா? வாடிக்கையாளர் சேமிப்பில் வங்கிகள்… புதிய சட்ட மசோதா சொல்வது என்ன?
பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்த, எப்.ஆர்.டி.ஐ., என்ற, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு சட்ட மசோதா, பொருளாதார நிபுணர்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே, சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆய்வில் இருக்கும் இம்மசோதா, வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மசோதா, வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், வங்கி, காப்பீட்டு நிறுவனம், நிதி சேவை நிறுவனம், கூட்டுறவு வங்கி மற்றும் பங்குச் சந்தை நிறுவனங்கள் திவாலாகும் சூழல் உருவானால், அவற்றை மீட்கவோ, மூடவோ வழிசெய்கிறது.
Advertisements